'ஸ்ரீ அன்னபூர்ணா' ஹோட்டல் பெயரில் போலி வணிகம்: திருப்பூரில் புகார்

கோவை: ‘திருப்பூர் ஸ்ரீ அன்னபூர்ணா’ என்ற பெயரில், திருப்பூரில் செயல்பட்டு வரும் ஹோட்டல் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கோவை ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்ரீ கெளரிசங்கர் நிறுவனத்தின் சார்பில் திருப்பூர் மாநகர ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை: ‘திருப்பூர் ஸ்ரீ அன்னபூர்ணா’ என்ற பெயரில், திருப்பூரில் செயல்பட்டு வரும் ஹோட்டல் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கோவை ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்ரீ கெளரிசங்கர் நிறுவனத்தின் சார்பில் திருப்பூர் மாநகர ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகர காவல் துறை மத்திய குற்றப்பிரிவில், ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்ரீ கெளரிசங்கர் ஓட்டல்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குனர் ஜெகன் எஸ் தாமோதரசாமி கடந்த மாதம் 25-ம் தேதி புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- 

கடந்த 1960-ம் ஆண்டு முதல் ஹோட்டல் வணிகம் செய்து வருகிறோம். ‘ஸ்ரீ அன்னபூர்ணா’ என்ற டிரேட் மார்க், நிறுவனர் டாக்டர் கே. தாமோதரசாமி நாயுடு அவர்கள் ஏற்படுத்தி, பதிவு செய்துள்ளார்.

இந்தநிலையில், ‘திருப்பூர் ஸ்ரீ அன்னபூர்ணா’ என்ற பெயரில், வெங்கடேஷ் தீனதயாளன் மற்றும் வசந்தி தீனதயாளன் ஆகியோர் எங்களது பதிவு பெற்ற பெயரான 'ஸ்ரீ அன்னபூர்ணா' என்பதை தவறாக பயன்டுத்தி திருப்பூரில், ஹோட்டல் நடத்தி வருகின்றனர். இது டிரேட்மார்க் உரிமையை மீறிய செயலாகும். 

டிரேட் மார்க்கை பயன்படுத்த வேண்டாம் என நாங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டபோதும், மறுத்து விட்டனர். சட்டப்பூர்வமாக தடுத்த நிறுத்த நீதிமன்றத்தை அணுகியபோதும் இதுவரை நிறுத்தவில்லை.

அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் எங்களது மனநிலைக்கும், கவுரத்திற்கும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர். இது, வாடிக்கையாளர்களையும் பெருமளவில் பாதித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் பலர், திருப்பூர் ஸ்ரீ அன்னபூர்ணா ஹோட்டலையும், எங்கள் நிறுவனம் என்று நம்பும் நிலை ஏற்படும். எனவே, ஸ்ரீ அன்னபூர்ணா பெயரில் தீனதயாளன் மற்றும் வசந்தி தீனதயாளன் பொருட்களை விற்று, வணிகம் செய்வதை தடுத்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

புகாரின் அடிப்படையில் திருப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து மேற்கொண்டுள்ளனர்.







Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...