வதந்திகள் பரப்புவது தடுத்து நிறுத்தப்படும்: மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று 'வாட்ஸ் அப்' உறுதி

கலவரங்கள், படுகொலைகளுக்குக் காரணமாக இருக்கும் வதந்தியான செய்திகள் பரவுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் உறுதியளித்துள்ளது.


கலவரங்கள், படுகொலைகளுக்குக் காரணமாக இருக்கும் வதந்தியான செய்திகள் பரவுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் உறுதியளித்துள்ளது. 

சமூக வலைதளங்களில் முதன்மை இடத்தை வகிக்கும் பேஸ் புக், வாட்ஸ் அப் போன்ற செயலிகள் மூலம் சமீபகாலமாக பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. குறிப்பாக, சாதி பாகுபாடு தாக்குதல், பசுவதை, குழந்தைகளைக் கடத்தும் கும்பல் போன்ற விஷமியான தகவல்களால் நாட்டின் பல பகுதிகளில் வன்முறை சம்பவங்களும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்நிலையில், வதந்தி சார்ந்த வன்முறைகள் பரவுவதை தடுக்க வேண்டும் என வாட்ஸ் அப் நிறுவனத்தை மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- வாட்ஸ் அப் செயலியில் பரப்பப்படும் பொறுப்பற்ற, உணர்வுகளை தூண்டிவிடக் கூடிய, ஆத்திரமூட்டும், வதந்தியான தகவல்களால் சமீபகாலமாக அசாம், மகாராஷ்டிரா, கர்நாடகா, திரிபுரா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற படுகொலை சம்பவங்கள் வேதனைக்கும், வருத்தத்துக்கும் உரியதாக உள்ளது.

நல்ல நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட செயலிகளை சில சமூகவிரோதிகள் தவறாகப் பயன்படுத்தி வன்முறைக்கு வித்திட்டு வருகின்றனர். இதில் தங்களுக்கான பொறுப்பை இந்த செயலி நிறுவனம் தட்டிக் கழித்துவிட முடியாது. இதைப்போன்ற தகவல்கள் பரவுவதை உரிய சாதனங்களின் மூலம் உடனடியாக தடுத்தாக வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் இந்த கோரிக்கையை ஏற்று வாட்ஸ் அப் நிறுவனமும், வதந்தியான செய்திகள் பரவுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது. 

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...