’ஜியோ ஜிகா ஃபைபர்’ என்ற புதிய சேவையை அறிமுகம் செய்தது ரிலையன்ஸ் நிறுவனம்

மும்பை: ஜியோ ஜிகா ஃபைபர் ப்ராட்பேண்ட் சேவை என்கிற ஃபைபர் கேபிள் இணைப்புடன் கூடிய ப்ராட்பேண்ட் புதிய சேவையை ரிலையன்ஸ் நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது.

மும்பை: ஜியோ ஜிகா ஃபைபர் ப்ராட்பேண்ட் சேவை என்கிற ஃபைபர் கேபிள் இணைப்புடன் கூடிய ப்ராட்பேண்ட் புதிய சேவையை ரிலையன்ஸ் நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது. 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 41-வது ஆண்டு பொதுக்கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இதில், அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் கூறியதாவது :-

நாட்டில் அதிகம் வரி செலுத்தும் தனியார் நிறுவனம் ரிலையன்ஸ் குழுமம் ஆகும். ரிலையன்ஸ் ஜியோவின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது. அதாவது, 215 மில்லியன் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். ஜியோ சேவை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இணைய பயன்பாடு 125 கோடி ஜி.பி.,யிலிருந்து 240 கோடி ஜி.பி.,யாக அதிகரித்துள்ளது, என்றார்.

இதைத் தொடர்ந்து, ஜியோ ஜிகா ஃபைபர் ப்ராட்பேண்ட் சேவை என்கிற ஃபைபர் கேபிள் இணைப்புடன் கூடிய ப்ராட்பேண்ட் புதிய சேவையை அம்பானி தொடங்கி வைத்தார். மேலும், ஜியோ போன் பாகம் 2-ஐயும் அறிமுகம் செய்து வைத்தார். இந்த சேவை குறித்து விளக்கி அம்பானி பேசினார். மும்பை, டெல்லி உள்பட நாடு முழுவதும் உள்ள 1,100 நகரங்களில் முதற்கட்டமாக இந்த சேவை அறிமுகப்படுத்தப்படும். ஃபைபர் இணைப்பு மூலம் வீடுகள், சிறு மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு ப்ராட்பேண்ட் வசதி ஏற்படுத்தித் தரப்படும். மேலும், இந்த ஃபைபர் இணைப்பின் மூலம் தொலைக்காட்சிகளில் இருந்தே வீடியோ கால்களை செய்யலாம். 

ஆகஸ்ட் 15ம் தேதி முதல் ஜியோ ஃபோனில் வாட்ஸ் அப், ஃபேஸ் புக் சேவை கிடைக்கும். வாய்ஸ் கமண்ட் சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜியோ ஃபைபர் சேவையைப் பெற ஜியோ இணையதளத்தில் பதிவு செய்யலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...