இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய உத்தரவு

சென்னை: இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சென்னை: இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது போலீசார் இந்தச் சட்டத்தை முதலில் பின்பற்ற வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவதையும், கார்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்பதையும், சீட் பெல்ட் அணிவதை உறுதி செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

மேலும், இருசக்கர வாகனங்களில் எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்படுவதால் இரவு நேரங்களில் பிற வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதாகவும், எனவே எல்.இ.டி விளக்குகள் பொருத்துவதை தடுக்க வேண்டும் என போலீசாருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். இது தொடர்பாக அவ்வப்போது முறையான வாகன சோதனை நடத்தவும், அது குறித்த அறிக்கையை வரும் 27-ம் தேதிக்குள் தமிழக அரசு தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...