நீலகிரி மலை ரயில் மூலமாக சுற்றுலாவை மேம்படுத்த ஈர்க்க தென்னக ரயில்வே திட்டம்

நீலகிரி: நீலகிரி மலை ரயில் மற்றும் அம்மாவட்டத்திலுள்ள ரயில் நிலையங்களை மேம்படுத்தி வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமாக சுற்றுலாவை மேம்படுத்த ஈர்க்க தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது.

நீலகிரி: நீலகிரி மலை ரயில் மற்றும் அம்மாவட்டத்திலுள்ள ரயில் நிலையங்களை மேம்படுத்தி வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமாக சுற்றுலாவை மேம்படுத்த ஈர்க்க தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது. 

மலை ரயில்







கடந்த 25 வருடங்களுக்கு மேலாக நீலகிரி மலை ரயிலில் பயன்படுத்தி வந்த என்.எம்.ஆர்-87 என்ற பெட்டி தற்போது தரமுயர்த்தப்பட்டுள்ளது. கோவை- பெங்களூர் இடையே இயங்கும் உத்ய் எக்ஸ்பிரஸ் போல நவீன முறையில் இந்த பெட்டியும் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ.1.8 லட்சம் மதிப்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளன. 



உதகை, குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையங்களை சிறப்பு மிக்க ரயில்நிலையங்களாக மாற்றும் வகையில் அங்கு இலவச வை-பை வசதி, மலை ரயிலின் சிறப்பை விளக்கும் பொருட்கள் விற்பனை போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், உதகை ரயில் நிலையத்தில், ரயில் பெட்டிக்குள் உணவகம் போன்ற அமைப்பு உருவாக்க திட்டமிடப்பட்டது. 



சுற்றுலாப் பயணிகளை கவருவதற்கு சுற்றுலா ஏற்பாட்டாளர்களுடன் இணைந்து பல்வேறு வசதிகளையும் மேம்படுத்த தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது. 

கடந்த கோடை விடுமுறையின் போது 56 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இதன் மூலம் ரூ.28 லட்சம் வருவாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...