'மதுவிலக்கு கொள்கையில் தமிழகம் பீகாரை பின்பற்ற வேண்டும்'

திருப்பூர்: மதுவிலக்கு கொள்கையில் தமிழகம் பீகாரை பின்பற்ற வேண்டும் என்று கள் இயக்கம் ஒருங்கினைப்பாளர் நல்லசாமி கூறியுள்ளார்.

திருப்பூர்: மதுவிலக்கு கொள்கையில் தமிழகம் பீகாரை பின்பற்ற வேண்டும் என்று கள் இயக்கம் ஒருங்கினைப்பாளர் நல்லசாமி கூறியுள்ளார். 

திருப்பூரில் செய்தியாளர் சந்திப்பின் போது அவர் கூறியதாவது:-

பீகாரை பின்பற்றி தமிழகத்திலும் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும். அங்கு ஆட்கடத்தல் 66.6% குறைந்துள்ளது, கொலை குற்றம் 23 சதவீதம் குறைந்துள்ளது, மக்களின் வாழ்க்கை தரம் கூடியுள்ளது. 

இதற்கு எல்லாம் முக்கிய காரணம் புரண மது விலக்கு கொள்கை தான்.

தமிழ்நாடு அரசு கள்ளுக்கு விதித்திருந்த தடையை நீக்கி விட்டது என்கிற குற்றசாட்டை எதிர்கட்சிகள், தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் தமிழக அரசுக்கு எதிராக தெரிவித்தால் அதை தமிழ்நாடு கள் இயக்கம் முன்னின்று முறியடிக்கும்.

கள் போதை பொருள் அல்ல அது உணவு என்பதை நிலை நிறுத்தும், எடப்பாடி அரசுக்கு சவால் விடும் வகையில் வரும் ஜனவரி 21-ந் தேதி நான்கு முறையாக அசுவமேத யாகம் நடத்தப்படும். 

அந்த யாகத்தை அரசு தரப்போ, அரசியல் தரப்போ யார் தடுத்து நிறுத்தினாலும் விவாதம் நடத்தப்படும்.

அதில், கள் ஒரு போதை பொருள் என நிரூபிக்கப்பட்டால் கள் இயக்கம் கலைக்கப்படும்.

கடந்த கால கசப்பான நிகழ்வின் காரணமாக விவசாயிகள் சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு நிலங்கள் கொடுக்க முன்வரவில்லை.

குறிப்பாக திருப்பூர் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை கொடுக்கவில்லை.

 ஏக்கர் ஒன்றுக்கு 200 முதல் 300 ரூபாய் இழப்பீடு கொடுத்துள்ளார்கள், 

பாதிப்பு இல்லாத விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் கொடுத்துள்ளார்கள்.

 இவ்வாறன முறை கேட்டினால் தான் இன்று நிலம் கொடுக்க மறுப்பதற்கு முதன்மை காரணமாக இருக்கின்றது.

திருப்பூர் அருகே காங்கேயம் பகுதியில் உள்ள இரும்பு தாது எடுக்கும் திட்டத்தில், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் எடுக்கப்பட வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...