வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதியின் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் நிலவரம்

வால்பாறை: வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.

வால்பாறை: வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாகப் பெய்த தொடர் மழையினால், நீர்நிலைகளில் தண்ணீரின் அளவு அதிகரித்து வருகிறது. 

இதன் ஒருபகுதியாக வால்பாறையில் கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறையில் 1.6 மி.மீ. மழையும், சின்னக்கல்லாரில் 4 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது. சின்னக்கல்லார் அருவிக்கு வரும் நீரின் அளவு 541.08 கனஅடியாகும். அருவியில் இருந்து அதே அளவு நீர் வெளியேற்றப்படுகிறது. 

நீரார் அணையில் மழையின் அளவு 1.6 மி.மீ., ஆகும். அணைக்கு விநாடிக்கு 76.27 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 97.32 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சோலையாறு அணையில் 7 மி.மீ., மழை பெய்துள்ளது. நீர்மட்டம் 160.93(160) அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 5,439.29 கனஅடியாக உள்ளது. விநாடிக்கு 1,009.94 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சேடல் வழியாக 582.18 கனஅடி நீர் பரம்பிகுளம் அணைக்கும், 414.12 கனஅடி நீர் சோலையார் பவர்ஹவுஸ் என 2 வழியாக மின் உற்பத்திக்குப்பின் கேரளா செல்கிறது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...