கோவை சங்கமேஸ்வரர் கோவிலில் தடையை மீறி விளக்கேற்றிய பா.ஜ.க.,வினர்: போலீஸ் குவிப்பால் பரபரப்பு

கோவை: கோவில்களில் விளக்கேற்றக்கூடாது என்ற இந்து அறநிலையத்துறை உத்தரவைக் கண்டித்து கோவை சங்கமேஸ்வரர் கோவிலில் தடையை மீறி பா.ஜ.க.,வினர் விளக்கேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: கோவில்களில் விளக்கேற்றக்கூடாது என்ற இந்து அறநிலையத்துறை உத்தரவைக் கண்டித்து கோவை சங்கமேஸ்வரர் கோவிலில் தடையை மீறி பா.ஜ.க.,வினர் விளக்கேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.



மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட தீ விபத்து குறித்து ஆராய்ந்த விசாரணை கமிஷன், கோவில்களில் விளக்கேற்றவும், கற்பூரம் கொளுத்தவும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவுறுத்தியது.

இதையடுத்து, கோவில்களில் விளக்கேற்றவும், கற்பூரங்கள் கொளுத்தவும் தடை விதித்து இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், இந்த தடையை கண்டித்து தடை மீறி விளக்கேற்றும் போராட்டத்தில் பா.ஜ.க.,வினர் ஈடுபட்டனர். 

பிரதோஷ தினமான இன்று கோட்டைமேடு பகுதியில் உள்ள சங்கமேசுவரர் ஆலயத்திற்கு வந்த 50-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.,வினர் தடையை மீறி நெய் விளக்குகளை ஏற்ற முயன்றனர். அப்போது அங்கு வந்த அறநிலையத்துறை அதிகாரிகள் விளக்குகள் ஏற்றி வைக்க தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியதை அடுத்து பா.ஜ.க.,வினர் அங்கு சென்று விளக்கேற்றினர்.



இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன், "இந்துக்களின் நம்பிக்கையான விளக்கேற்றும் முறைக்கு தடை விதிக்கக் கூடாது. பாதுகாப்பு காரணமாக இருந்தால் விளக்கேற்ற தனி இடம் கோவில்களில் ஒதுக்கப்பட வேண்டும். இது தொடர்பாக, அனைத்து கோவில்களிலும் பா.ஜ.க.,வினர் நேரில் ஆய்வு நடத்துவார்கள். எந்த கோவிலிலாவது தடை விதிக்கப்பட்டால், தடை நீக்கம் தொடர்பாக தமிழக அரசுக்கு வலியுறுத்தப்படும். தடையை மீறியதற்காக காவல் துறையினர் வழக்குப் பதிந்தால் அதனை எதிர்கொள்ளத் தயார்." என்றார்.

பா.ஜ.க.,வினரின் இந்த திடீர் போராட்டத்தை அடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...