திருப்பூரில் பட்டப்பகலில் சாலையோரங்களில் செல்லும் சாய்க்கழிவு நீர்: அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

திருப்பூர்: அதிகாரிகளின் அலட்சியத்தால் அனுமதி பெறாமலோ செயல்படும் சாய ஆலைகள் சாலையோரங்களிலேயே சாயக்கழிவு நீரை திறந்துவிடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பூர்: அதிகாரிகளின் அலட்சியத்தால் அனுமதி பெறாமலோ செயல்படும் சாய ஆலைகள் சாலையோரங்களிலேயே சாயக்கழிவு நீரை திறந்துவிடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பூரில் ஏராளமான சாய ஆலைகள் அனுமதி பெற்றும், அனுமதியின்றியும் செயல்பட்டு வருகின்றன. இதில் ஆற்றோரங்களில் அனுமதி பெறாமல் செயல்படும் சாய ஆலைகள் முறைகேடாக சாயக்கழிவு நீரை ஆற்றில் கலந்து விடுகின்றனர். 

இதனால் ஆற்று நீர் எவ்வித உபயோகமின்றி பாழாகியுள்ளது. இதன் ஒருபகுதியாக அங்கேரிபாளையம்-நல்லாற்றின் ஓரமாக செயல்படும் சாய ஆலைகள் உள்ள பகுதியில் பட்டப் பகலிலேயே சாயக்கழிவு நீர் சாலையில் வழிந்தோடியது காண்போரை அதிர்ச்சியடைய வைத்தது.



ஆற்றின் ஓரமாகவே சாயக்கழிவு நீர் சென்ற காரணத்தால், பகல் நேரத்திலேயே சாய ஆலையினர் ஆற்றில் கழிவு நீரை கலக்க துணிந்து விட்டனர் என கூறிய பொதுமக்கள், இதுபோன்ற அனுமதி பெறாமல் இயங்கி வரும் பட்டன், ஜிப் டையிங் போன்ற நிறுவனங்களை கண்காணிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் செயல்பாடானது தீவிரப்படுத்தப்பட்டால் மட்டுமே ஆற்றில் சாய்க்கழிவு நீரை கலக்கும் செயலை தடுக்க முடியும் என்றும், நல்லாறு, நொய்யலாறு போன்றவற்றை காப்பாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...