பழங்குடி மக்களுக்கு நறுமண பயிர்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள அட்டக்கட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் பழங்குடி மக்களுக்கு நறுமண பயிர்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள அட்டக்கட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் பழங்குடி மக்களுக்கு நறுமண பயிர்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.



அட்டக்கட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் சி.எஸ்.ஐ.ஆர்., மருத்துவமனை மற்றும் நறுமண தாவர ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக நறுமண பயிர்களில் இருந்து நறுமண எண்ணெய் தயாரிப்பது குறித்து விழிப்புணர்வு பயிற்சி பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதில், லெமன்கிராஸ் என்று அழைக்கப்படும் நறுமண தாவரத்தில் இருந்து நறுமண எண்ணெய் பெறப்பட்டு, சோப், வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகிறது. மேலும், லெமன்கிராஸ் நறுமண தாவரத்தை எவ்வாறு பயிரிடுவது, பராமரிப்பது, அறுவடை செய்வது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. 

லெமன்கிராஸ் நறுமண தாவரம் இந்தியா முழுவதும் பெருமளவு பயிரிடப்படுவதாகவும், 3 முதல் 4 அறுவடையின் மூலம் வருடத்திற்கு ஒரு ஏக்கரில் 120 கிலோ நறுமண எண்ணெய் பெறலாம். வருடத்திற்கு நறுமண எண்ணெயின் மூலம் ஒரு ஏக்கரில் ரூ. 1,50,000 வரை பெறலாம் என முகாமில் தெரிவித்தனர். 



இம்முகாமில் திருப்பூர், பொள்ளாச்சி, வால்பாறை வனக்கோட்டத்திற்குட்பட்ட காடம்பாறை, கருமுட்டி, வெள்ளிமுடி, பூச்சிகுத்தான்பாறை, குழிப்பட்டி, குருமலை, மாவடப்பு, காட்டுப்பட்டி போன்ற செட்டில்மெண்ட் பகுதியில் இருந்து 150-க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...