மலர் சாகுபடி செய்யக் கடன் வழங்கியதில் மோசடி : சி.பி.ஐ., விசாரணை

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் மலர் சாகுபடி செய்யக் கடன் வழங்கியதில் நிகழ்ந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ தீவிர விசாரணையை நடத்தி வருகிறது.


நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் மலர் சாகுபடி செய்யக் கடன் வழங்கியதில் நிகழ்ந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ தீவிர விசாரணையை நடத்தி வருகிறது. 

நீலகிரியில் தேயிலைக்கு மாற்றுப் பயிராக மலர் சாகுபடி ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் 5% மானியத்தை வழங்குகின்றன. மேலும், வங்கிகள் மூலமும் கடன்கள் வழங்கப்படுகின்றன. இத்தகைய திட்டத்தின் மூலம் உதகையிலுள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியும் கடன் வழங்கி வருகிறது. 



இக்கடன் பெறுவதற்காக கிரவுன் புளோரி டெக் என்ற அமைப்பின் உரிமையாளர் ராஜன் வங்கி மேலாளர் சிவகுமாரை அணுகி விவசாயிகளுக்கு மலர் சாகுபடிக்காக பசுமை குடில் அமைக்கக் கடன் கேட்டுள்ளார். இதற்கான ஆவணங்களையும் அவர் அளித்துள்ளார். அதன்படி, வங்கி விதிமுறைகளை மீறி 58 பேருக்கு ரூ.24.75 இலட்சம் கடன் வழங்கியுள்ளார். அதேவேளையில், கிரவுன் புளோரி டெக் மூலம் எந்த விவசாயும் பயனடையவில்லை என்றும், இதனால் வங்கிக்கு ரூ. 14.36 இலட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது. 

அதன்பேரில், இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடைபெற்று வருகிறது. வங்கியின் முன்னாள் மேலாளர் சிவக்குமார் மற்றும் கிரவுன் புளோரி டெக் உரிமையாளர் ராஜன் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது. இதுகுறித்து தற்போதைய மேலாளரிடம் கேட்ட பொழுது விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...