நீலகிரி ப்ரீமியம் சிறப்பு மலை ரயிலில் நவீன வசதியுடன் கூடிய புதிய ரயில்பெட்டி அறிமுகம்

நீலகிரி: நவீன வசதிகளுடன் கூடிய புதிய ரயில் பெட்டி நீலகிரியில் சீசன் சமயங்களில் இயக்கப்படும் ப்ரீமியம் சிறப்பு மலை ரயிலில் அறிமுகம் செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

நீலகிரி: நவீன வசதிகளுடன் கூடிய புதிய ரயில் பெட்டி நீலகிரியில் சீசன் சமயங்களில் இயக்கப்படும் ப்ரீமியம் சிறப்பு மலை ரயிலில் அறிமுகம் செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி காலை 7.10 மணிக்கு நான்கு பெட்டிகளுடன் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 200 இருக்கை வசதி கொண்ட இந்த ரயிலில் முதல் வகுப்பு கட்டணம் ரூ. 120-ம், இரண்டாம் வகுப்பு கட்டணம் ரூ. 30-ம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சீசன் சமயங்களில், வார விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் கட்டணத்துடன் ப்ரீமியம் சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டது. இதில், முதல் வகுப்பு கட்டணம் 1,100 ரூபாயும், இரண்டாம் வகுப்பு கட்டணம் 800 ரூபாய் வசூலிக்கப்பட்டது. 



சுமார் பத்து மடங்கிற்கும் மேலாக சிறப்பு ரயிலில் கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்பட்டாலும் சுற்றுலா பயணிகள், எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் வழக்கமான பெட்டிகளிலேயே பயணம் செய்தனர். இது அதிக கட்டணம் செலுத்தி பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனைக் கருத்தில் கொண்டு பிரிமீயம் ரயிலில் பழைய இருக்கைகளை மாற்றிவிட்டு புதிய புஷ்பேக் இருக்கைகள் (28 இருக்கைகள்) பொருத்தப்பட்ட பெட்டி திருச்சியில் உள்ள பொன்மலை ரயில்வே பணிமலையில் தயார் செய்யப்பட்டது. லக்கேஜ் வைக்க வசதி, இருக்கையில் அமர்ந்து சாப்பிடவும், தண்ணீர் பாட்டில்கள் வைப்பதற்கான ஸ்டேண்டு என இந்த புதுப்பெட்டி தயாரிக்கப்பட்டுள்ளது. 

இந்த ரயில் பெட்டி தற்போது திருச்சியில் இருந்து மேட்டுப்பாளையம் ரயில்நிலையம் வந்தடைந்துள்ளது. கிரேன் மூலம் இறக்கப்பட்ட இந்த சிறப்பு மலை ரயில் பெட்டி விரைவில் பயணிகள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...