அரசு பள்ளியில் படித்த ஒரேயொரு மாணவனுக்கு மருத்துவ இடம்

கடலூர்: கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவனுக்கு மட்டுமே தமிழகத்தில் மருத்துவப் படிப்பு பயில்வதற்கான இடம் கிடைத்துள்ளது.

கடலூர்: கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவனுக்கு மட்டுமே தமிழகத்தில் மருத்துவப் படிப்பு பயில்வதற்கான இடம் கிடைத்துள்ளது. 

சென்னையில் கடந்த ஜுலை 1-ம் தேதி தொடங்கிய மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு வரும் 10 வரை நடக்கிறது. இதில், தமிழகம் முழுவதும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டுள்ளனர். அரசுப் பள்ளிகளைக் காட்டிலும், தனியார் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கே அதிகம் மருத்துவப் படிப்பிற்கான இடம் கிடைத்து வருகிறது. இந்த நிலையில், அரசுப் பள்ளியில் பயின்ற ஒரேயொரு மாணவனுக்கு மருத்துவப் படிப்பிற்கான இடம் கிடைத்திருப்பது அனைவரிடத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம் மு. பொடையூர் கிராமத்தைச் சேர்ந்த சத்துணர்வு ஊழியர் ரங்கராஜன் என்பவரின் மகன் அலெக்ஸ் பாண்டியன். இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து பிளஸ்-2 தேர்வில் 1.111 மதிப்பெண்கள் பெற்றார். பின்னர், சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட நீட் தேர்வு பயிற்சியில் கலந்து கொண்டு, பயிற்சி பெற்றார். அதன் விளைவாக, நீட் தேர்வில் 306 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்தார். இதைத் தொடர்ந்து, சென்னையில் நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்ட அலெக்ஸ் பாண்டியனுக்கு, திருச்சியில் உள்ள கே.ஏ.பி.வி., அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இதன்மூலம், அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 8 மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...