மேட்டுப்பாளையத்தில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்து மினி மாரத்தான்

கோவை: மேட்டுப்பாளையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தியும் பிளாஸ்டிக் இல்லா மாற்று நடவடிக்கைக்கு பொதுமக்கள் மாற வேண்டி மாணவ-மாணவிகள் இன்று மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடத்தினர்.

கோவை: மேட்டுப்பாளையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தியும் பிளாஸ்டிக் இல்லா மாற்று நடவடிக்கைக்கு பொதுமக்கள் மாற வேண்டி மாணவ-மாணவிகள் இன்று மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடத்தினர்.



மக்காத பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இச்சட்டம் வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அமுலுக்கு வரும் நிலையில், பிளாஸ்டிக் இல்லா மாற்று நடவடிக்கைக்கு மாற வேண்டிய நேரமிது என்பதை வலியுறுத்தியும், இயற்கை சூழலுக்கு பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மேட்டுப்பாளையத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்ற 'க்ராஸ் கன்ட்ரி ரேஸ்' என்னும் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடத்தப்பட்டது. 



சுவாமி சச்சிதானந்தா ஜோதி நிக்கேதன் பள்ளி சார்பில் இன்று காலை நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு மாரத்தான் பந்தயத்தை கவிஞர் கவிதாசன் மற்றும் காவல்துறை ஆய்வாளர் சென்னகேசவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அண்மையில் திருப்பூரில் பிளாஸ்டிக் இல்லா திருமண நிகழ்ச்சி நடைபெற்றதை மாணவர்கள் மத்தியில் சுட்டிக்காட்டி பேசிய கவிதாசன், "இது போல நாம் அனைவரும் நம் இல்லங்களில் இருந்து பிளாஸ்டிக் ஒழிப்பைத் தொடங்க முன்வர வேண்டும்." என்றார். 

மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் தொடங்கிய இந்த மராத்தான், நீலகிரி மலையடிவாரமான கல்லார் வரை சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபெற்றது. இறுதியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.



Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...