தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் உதகையில் நவீன மருத்துவக் கல்லூரி: உதகையில் ஆ.ராசா பேட்டி

நீலகிரி: தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் உதகையில் நவீன மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கூறியுள்ளார்.

நீலகிரி: தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் உதகையில் நவீன மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கூறியுள்ளார்.



உதகை நகர தி.மு.க., சார்பில் தி.மு.க., தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு ஏழை, எளிய பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, ஆதரவற்றோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி உதகையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க., கொள்கை பரப்பு செயலாளருமான ஆ.ராசா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நீலகிரி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் தொழில் நிறுவனங்களை வேண்டுமென்றே இழுத்து மூடும் வேலைகளில் பா.ஜ.க., அரசு செய்து வருகிறது. அதைத் தட்டி கேட்க தைரியம் இல்லாத அரசு தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறது.

2 ஆயிரம் தொழிலாளர்களை கொண்டு ராணுவ பொருட்களை உற்பத்தி செய்து வரும் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையை செப்டம்பர் மாதத்திற்குள் இழுத்து மூடும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இங்குள்ள அ.தி.மு.க.,வின் இரண்டு எம்.பி.,க்களும் இதற்கு நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.

எனவே, தி.மு.க., நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் இத்தொழிற்சாலை தொடர்ந்து நடத்த பிரதமரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.



அடுத்து தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் உதகையில் இயங்கி வந்த ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை கட்டிடத்தில் அதி நவீன மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும். தமிழகத்தில் பொம்மலாட்ட ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்திய அரசு தமிழக ஆட்சியாளர்களை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...