27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய 200-க்கும் மேற்பட்டோர் கைது

கோவை: உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கோவை: உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும், உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3-ம் தேதி முதல் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டமானது நடைபெற்று வருகின்றது. 



இந்த நிலையில், கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுமார் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க ஒருங்கிணைப்பாளர் முருகேசன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது சங்க நிர்வாகிகள் பேசுகையில், "தங்களது கோரிக்கைகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வரும் 12-ம் தேதி தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து முறையிடுவோம்," என அவர்கள் தெரிவித்தனர். 



இதனையடுத்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். மறியல் போராட்டம் காரணமாக ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.



Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...