அமித்ஷா சென்னை வருகைக்கு எதிர்ப்பு: டுவிட்டரில் டிரென்டான #goback அமித்ஷா

சென்னை: பா.ஜ.க., தேசிய தலைவர் அமித்ஷா சென்னையில் இன்று சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில், #goback அமித்ஷா என்ற ஹேஸ்டேக் டுவிட்டரில் டிரென்டாகியுள்ளது.

சென்னை: பா.ஜ.க., தேசிய தலைவர் அமித்ஷா சென்னையில் இன்று சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில், #goback அமித்ஷா என்ற ஹேஸ்டேக் டுவிட்டரில் டிரென்டாகியுள்ளது. 

மக்களவைத் தேர்தலுக்கு வியூகம் வகுப்பதற்காக பா.ஜ.க., தேசிய தலைவர் அமித்ஷா இன்று சென்னை வந்துள்ளார். அவரை தமிழக பா.ஜ.க., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர். சென்னை ஈச்சம்பாக்கத்தில் அமித்ஷா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து, மாலை 4 மணி வரை பா.ஜ., நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கிறார்.

மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை சகோதர இயக்கங்களுடன் கலந்துரையாடுகிறார். மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி சக்தி மற்றும் மகா சக்தி கேந்திரா அமைப்பின் பொறுப்பாளர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார்.

இந்த நிலையில், அமித்ஷாவின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், டுவிட்டரில் #goback அமித்ஷா (#goback Amith shah) என்ற ஹேஸ்டேக் டிரென்டாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி தமிழகம் வந்திருந்த போது, #goback மோடி என்ற ஹேஸ்டேக் தேசிய அளவில் டிரென்டாகியது. பிரதமர் மோடியை தொடர்ந்து, தற்போது அமித்ஷாவிற்கு டுவிட்டர் மூலமாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழகத்தில் கால்பதிக்க வேண்டும் என பா.ஜ.க.,வினர் முழு முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அடுத்தடுத்த பா.ஜ.க., தலைவர்களுக்கான இது மாதிரியான ஹேஸ்டேக்குகள் அக்கட்சியினரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...