கோவை குற்றாலத்தில் பழங்குடியினருக்கான பணியிடங்களைப் பறிக்கும் அதிகாரிகள்..?

கோவை: கோவை குற்றாலத்தில் பழங்குடியினருக்கென ஒதுக்கப்பட்ட பணியிடங்களில், பிற சமூகத்தினரை சட்டவிரோதமாக பணியமர்த்தியுள்ளதாகப் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

கோவை: கோவை குற்றாலத்தில் பழங்குடியினருக்கென ஒதுக்கப்பட்ட பணியிடங்களில், பிற சமூகத்தினரை சட்டவிரோதமாக பணியமர்த்தியுள்ளதாகப் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரம் அருகே சிறுவாணி பகுதியில் கோவை குற்றாலம் அமைந்துள்ளது. இங்கு, கடந்த 2009-ம் ஆண்டு முதல் வனத்துறையின் சார்பில் இயற்கை சுற்றுலாவிற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது. இங்கு, பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு மட்டுமே பணிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, பழங்குடியினர் உள்பட சீங்கபதி, சாடிவயல் மற்றும் வெள்ளப்பதி உள்ளிட்ட குக்கிராமங்களைச் சேர்ந்தவர்களை வைத்து இயற்கைச் சுற்றுலாக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. 



இந்தக் குழுவே, கோவை குற்றாலத்தில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், பழங்குடியின மக்கள் அல்லாது வெளியில் இருப்பவர்கள் 22 பேர் சட்டவிரோதமாக பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமல்லாது, பழங்குடியின மக்களுக்கு ஒருநாளைக்கு ரூ. 275 முதல் ரூ. 285 வழங்கப்பட்டு வரும் நிலையில், வெளியாட்களுக்கு ரூ. 8,000 முதல் ரூ. 13,000 வரை வழங்குப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 



இந்த சூழலில், கோவை வனச்சரகத்திற்குட்பட்ட பரலிக்காடு பகுதியில் அமைந்துள்ள மற்றொரு இயற்கை சுற்றுலாப் பகுதியில் 60 பணியிடங்களில் பழங்குடியின மக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 

இதேபோல, இயற்கைச் சுற்றுலாக் குழுவின் தலைவரை தேர்வு செய்வதிலும் விதிமுறை மீறல்கள் நடைபெற்று வருவதாகப் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதாவது, குழுத் தலைவர் பதவிக்கான தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக எந்தவித தேர்தலும் நடைபெறவில்லை. எனவே, ஒரே நபர் 10 ஆண்டுகளாக அந்தப் பதவியை வகித்து வருகிறார்.

 

மேலும், பழங்குடியினத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்களுக்கு அலுவலகத்தில் பணி வழங்க வேண்டும் என அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், தகுதியுடைய இளைஞர்களுக்கும் வாகன ஓட்டுநர் உள்ளிட்ட பணிகளையே வழங்குவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதோடு, பழங்குடியின சமுதாயத்தினரை முன்னேற்றும் வகையில், இயற்கை சுற்றுலாவிற்கென ஒதுக்கப்பட்ட ரூ. 77.70 லட்சத்தை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 



இதனிடையே, சட்டவிரோத நியமனங்கள் குறித்து உரிய விசாரணை நடத்த உள்ளதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...