பாரம்பரிய விளையாட்டுக்களை மீட்க மேட்டுப்பாளையத்தில் புதிய முயற்சி

மேட்டுப்பாளையம்: இன்றைய நவீன மாற்றங்களால் நமது வாழ்வியல், கலாச்சாரம், உணவு உள்ளிட்ட பல்வேறு பாரம்பரியங்களை புறந்தள்ளி வருகிறோம்.


மேட்டுப்பாளையம்: இன்றைய நவீன மாற்றங்களால் நமது வாழ்வியல், கலாச்சாரம், உணவு உள்ளிட்ட பல்வேறு பாரம்பரியங்களை புறந்தள்ளி வருகிறோம். 

இதில் குறிப்பிடத்தக்கது நம் உடல் மற்றும் அறிவுத்திறனை ஒரு சேர செழுமைப்படுத்தும் நமது பாரம்பரிய விளையாட்டுக்கள். காலப்போக்கில் விளையாடாமல் விட்ட அந்த விளையாட்டுக்கள் மெல்ல மெல்ல மறக்கடிக்கப்பட்டு வருகின்றன.

கில்லிதாண்டு, பரமபதம், பல்லாங்குழி, ஆடு-புலி ஆட்டம், சொட்டாங்கல், நொண்டியாட்டம், சிலம்பாட்டம், உண்டிவில், பம்பரம், பட்டம் விடுதல் உள்ளிட்ட தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுக்கள் இன்றைய இளையதலைமுறை குழந்தைகளின் கவனத்திற்கே கொண்டு செல்லப்படுவதில்லை.



நினைவாற்றலை அதிகரித்து கொடுத்து வாங்கும் பண்பை வலியுறுத்தும் பல்லாங் குழியாட்டம், எத்தனை முறை தோல்வியடைந்தாலும் மீண்டும் முயற்சித்து வெற்றி பெற ஊக்குவிக்கும் பரமபத விளையாட்டு, கவன சிதறலை நேர்படுத்தும் சொட்டாங்கல், மனம் மற்றும் உடல் வலிமைக்கான சிலம்பாட்டம் என அனைத்து விளையாட்டுக்களும் மறைந்து போய், இன்றைய குழந்தைகள் செல்போனுக்குள் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.



செல்போன் விளையாட்டு, கம்யூட்டர் கேம்ஸ், கார்டூன் வீடியோஸ் என வீட்டினுள் ஒரே இடத்தில் முடங்கிக் கிடப்பதால் குழந்தைகளின் உடல் நலம் மட்டுமின்றி, மன நலமும் பாதிக்கப்படுவதாக மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டு வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு இன்றைய பள்ளி பருவ மாணவ மாணவிகளிடம் மறைந்து வரும் நமது பாரம்பரிய விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தி, அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலான நிகழ்ச்சி மேட்டுப்பாளையத்தில் இன்று நடத்தப்பட்டது. 

'லாலிபாப் மழலையர் பள்ளி' (lollypop kids school) சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடி மகிழ்ந்தனர். இந்த விளையாட்டுக்களைப் பற்றி எதுவுமே தெரியாமல் இருந்த சிறுவர்-சிறுமியர்களுக்கு, விளையாட்டுக்களை விளையாடும் விதங்கள் குறித்தும் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...