மடிக்கணினி வாங்க சேமித்த பணத்தில் மாடு வாங்கிய பள்ளி மாணவன்: திருப்பூரில் ருசிகரம்

திருப்பூர்: காங்கயம் அருகே மடிக்கணினி வாங்குவதற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தில், மாடு வளர்க்க ஆசைப்பட்டு பள்ளி மாணவன் ஒருவர் மாட்டுச் சந்தையில் கன்றுக்குட்டி வாங்கிச் சென்ற சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பூர்: காங்கயம் அருகே மடிக்கணினி வாங்குவதற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தில், மாடு வளர்க்க ஆசைப்பட்டு பள்ளி மாணவன் ஒருவர் மாட்டுச் சந்தையில் கன்றுக்குட்டி வாங்கிச் சென்ற சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், சிவகிரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பொன்.சிவவேல். இந்த மாணவருக்கு மடிக்கணினி வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் அதிகம். இதனால், மடிக்கணினி வாங்குவதற்காக பெற்றோர் செலவுக்கு கொடுத்த பணத்தை சேர்த்து வைத்துள்ளார். இவ்வாறாக, ரூ.19 ஆயிரம் சேமித்து வைத்திருந்தார்.

இந்த நிலையில், அவருக்கு காங்கயம் இன மாடு வளர்க்க ஆசை வந்தது. ஒரு கன்றுக்குட்டியை வாங்கி வளர்க்க வேண்டும் என முடிவு செய்து, அவரின் பெற்றோரை அழைத்துக் கொண்டு கடந்த 1-ஆம் தேதி காங்கயம் அருகே நத்தக்காடையூரில் கூடும் காங்கயம் இன மாடுகள் சந்தைக்கு கன்றுக்குட்டி வாங்க வந்தார். காங்கயம் இன மாடுகளை மட்டுமே விற்க-வாங்க ஞாயிற்றுக் கிழமைதோறும் நடைபெறும் இந்த சந்தையில், காங்கயம் இன கன்றுக்குட்டிகளின் ஆரம்ப விலையே ரூ.30 ஆயிரத்தைத் தாண்டும்.

இந்நிலையில், பொன்.சிவவேல் சந்தைக்கு வந்து கன்றுக்குட்டி வாங்குவதற்கு விலையை விசாரித்து விட்டு, தன் கையில் இருந்த பணம் ரூ.19 ஆயிரத்திற்கு மாடு வாங்க முடியாமல், ஏமாற்றத்துடன் பெற்றோருடன் திரும்பிச் சென்றார். காங்கயம் இன மாடு வளர்க்கும் அந்த மாணவனின் ஆர்வத்தைத் தெரிந்து கொண்ட மாட்டுச் சந்தை ஏற்பாட்டாளர்கள், ஜூலை 8-ஆம் தேதி நடைபெற்ற அந்த சந்தைக்கு மாணவன் பொன்.சிவவேலை அழைத்துள்ளனர். 

மாட்டுச் சந்தை ஏற்பாட்டாளர்கள் ஆளுக்கு கொஞ்சம் பணம் அளித்து ரூ.13 ஆயிரத்தை அந்த சிறுவனிடம் கொடுத்தனர். இதில் உற்சாகமான பொன்.சிவவேல், சந்தை ஏற்பாட்டாளர்கள் கொடுத்த ரூ.13 ஆயிரம், தன் கையில் வைத்திருந்த ரூ.19 ஆயிரத்தை சேர்த்து ரூ.32 ஆயிரத்துக்கு காங்கயம் இன கிடாரிக் கன்று ஒன்றை வாங்கிச் சென்றார்.

பள்ளிச் சிறுவனின் மாடு வளர்க்கும் இந்த ஆர்வம் அப்பகுதி பொதுமக்களையும், விவசாயிகளையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...