பாதாளத்தில் வீடு; பரிதவிக்கும் எளிய மக்கள்

கோவை: வீட்டு வாசலை மறைத்து அதிக உயரத்தில் மழை நீர் வடிகால் கட்டப்பட்டிருப்பதால் நாள்தோறும் வீட்டிற்குள் சென்று வர சிரமப்படுவதாக முத்தண்ணன் குளக்கரையில் வசிக்கும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கோவை: வீட்டு வாசலை மறைத்து அதிக உயரத்தில் மழை நீர் வடிகால் கட்டப்பட்டிருப்பதால் நாள்தோறும் வீட்டிற்குள் சென்று வர சிரமப்படுவதாக முத்தண்ணன் குளக்கரையில் வசிக்கும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.



21-ம் வார்டு, சுண்டப்பாளையம் சாலையில் தடாகம் சாலை சந்திப்பு முதல் சிவில் சப்ளை குடோன் வரை 2000-க்கும் மேற்பட்ட எளிய மக்கள் வசித்து வருகின்றனர். மழை நீர் வடிந்து செல்வதற்காக இந்த சாலையில் சுமார் 2 கி.மீ அளவிற்கு மழை நீர் வடிகால் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ளது.

தார் சாலையை விட தாழ்வான பகுதியில் கட்டப்படும் வடிகால் வழியாக, சாலை மற்றும் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் மழைநீர் அருகில் உள்ள நீர் நிலைகளைச் சென்றடையும்.

வீடுகளுக்குள் வெள்ளம்

ஆனால், இந்த பகுதியில் கட்டப்பட்டிருக்கும் மழை நீர் வடிகால், சாலையை விட இரண்டு அடி உயரத்திலும், குடியிருப்புகளின் வாசலை மறைத்து சுமார் நான்கு அடி உயரத்திலும் கட்டப்பட்டிருப்பதால், மழை நீர் வடிய வழியின்றி சாலையை ஆக்கிரமிப்பதோடு, வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துவிடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.



"வீட்டின் முகப்பை மறைத்து, தரை தளத்தைவிட அதிக உயரத்தில் வடிகால் கட்டப்பட்டதால், தினமும் குனிந்தும் நெளிந்தும் வீட்டிற்குள் சென்றுவர வேண்டியுள்ளது. சாலை உயரமாகி, குடியிருப்பு பள்ளத்திற்குள் சென்று விட்டதால் மழை நாட்களில் வீட்டுக்குள் வெள்ள நீர் புகுந்து பெரும் சிரமத்தை உண்டாக்குகிறது. 

மழைநீர் வடிகால் கட்டுவதற்கு முன் இந்த பிரச்சனைகள் வரவில்லை. தற்போது, குளிர் தேசங்களில் இருக்கும் எஸ்கிமோவைப் போல் என் வீடு மாறிவிட்டது." என்று கண்கலங்கியபடி கூறுகிறார் இப்பகுதியில் இரண்டு தலைமுறையாக வசித்துவரும் அப்துல் மொய்தீன்.

இந்த பிரச்சனைகளினால் முதியவர்கள், குழந்தைகள் கொண்ட பல குடும்பத்தினர் இப்பகுதியை காலி செய்துவிட்டு சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.



இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசி ஒருவர் கூறுகையில், "சில ஆண்டுகளுக்கு முன், சுமார் நான்கு அடி உயரத்தில் சாலையை ஒட்டி அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள், தற்போது குடத்தை வைக்கும் அளவிற்கு கூட உயரமில்லாமல் காணப்படுகிறது. 

புதிய தார் சாலைகள்

ஆண்டுதோறும் அதிகரித்து வரும் தார் சாலையின் தடிமன் தான் இதற்கு காரணம். சாலையின் உயரத்திற்கு குடிநீர் குழாயை உயர்த்துவதில்லை. மாறாக மழைநீர் வடிகால் கட்டி இப்பகுதி மக்களை வதைக்கின்றனர். மேலும், பழைய தார் சாலையை பெயர்த்தெடுக்காமல் அதன் மேலேய புதிதாக தார் சாலை போடப்படுகிறது. 



இதனால், மழைநீர் மண்ணுக்கு அடியில் செல்ல வழியின்றி தாழ்வான பகுதியில் இருக்கும் வீடுகளுக்குள் வந்துவிடுகிறது. இதுகுறித்து புகாரளித்தபோது, வீட்டை சாலை அளவிற்கு உயர்த்திக் கட்டிக்கொள்ளுமாறு மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக பதில் கூறுகின்றனர். அன்றாடம் கூலி வேலை பார்த்து, ஓட்டு வீட்டில் வசிக்கும் எங்களுக்கு அதற்கெல்லாம் வசதியுமில்லை, வலிமையுமில்லை." என்றார்.

இதேபோல், சுமார் 300 குடும்பங்கள் வசித்து வரும் தடாகம் சாலையில் தற்போது ஒரு கி.மீ தூரத்திற்கு மழைநீர் வடிகால் கட்டப்பட்டு வருகின்றது. இந்த வடிகாலும் இதேபோல் மக்களை வதைக்க காத்திருப்பதாக மக்கள் குமுறுகின்றனர்.

இதுகுறித்து, 21-ம் வார்டு முன்னாள் மாமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாநகர செயலாளருமான எம்.எஸ்.வேல்முருகன் கூறுகையில், "குளங்களை புனரமைத்து பராமரிப்பதற்காக மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்ட எட்டு குளங்களும் தற்போது கழிவுநீர் குளமாக காட்சியளிக்கின்றன. 

இதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.127 கோடியே 50 லட்சம் நிதி எங்கு சென்றது என்பது மர்மமாக உள்ளது. நகரில் மழைநீர் வடிகால் முறையாக கட்டப்பட்டு, அதில் கழிவு நீர் கலப்பதை தடுத்திருந்தால் கூட இன்று இந்த நீர் நிலைகள் சுத்தமாக இருந்திருக்க கூடும். மாறாக, எளிய மக்களின் இருப்பிடத்தை அடைத்து கட்டப்படும் இந்த வடிகால்களால் எந்த பயனுமில்லை. 

மேலும், இது போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தி, இப்பகுதியில் 90 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் ஏழை எளிய மக்களை நகருக்கு வெளியில் அப்புறப்படுத்திவிட்டு, குளங்கள் மேம்பாடு என்கின்ற பெயரில் பல கோடிகளை கொள்ளையடிக்க ஆளும் கட்சியினரும், அதிகாரிகளும் முயற்சிக்கின்றனர்" என்று குற்றம் சாட்டுகிறார்.

வளந்து வரும் கோவை நகருக்கான உட்கட்டமைப்புகளில் மழைநீர் வடிகால் முக்கியமானவை தான். அதே நேரத்தில், அவற்றை பொதுமக்களின் நலனுக்காக மட்டுமே கட்டிக்கொடுக்க வேண்டியது மாநகராட்சியின் கடமை. மாறாக, மக்களை தரை மட்டத்திற்கு கீழ் இறக்கி வாழச்சொல்வது அவர்களின் வாழ்க்கை தரத்தை சீர்குலைக்கும் செயல் என்பதை மாநகராட்சி அதிகாரிகள் உணர்ந்துகொள்ள வேண்டும். 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...