தொடர் மழையால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : பில்லூர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்வு

கோவை: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் பருவ மழைக் காரணமாக மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளபெருக்கால், பில்லூர் அணையின் நீர்மட்டம் 92 அடியாக உயர்ந்துள்ளது.

கோவை: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் பருவ மழைக் காரணமாக மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளபெருக்கால், பில்லூர் அணையின் நீர்மட்டம் 92 அடியாக உயர்ந்துள்ளது. 

மேற்கு தொடர்ச்சி மலைக்காட்டின் நடுவே கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அமைந்துள்ளது பில்லூர் அணை. இவ்வணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டத்தின் அப்பர் பவானி, அவலாஞ்சி, குந்தா மற்றும் கேரள வனப்பகுதிகளில் பருவமழை பெய்து வருகிறது. இதனால், பில்லூர் அணைக்கான நீர்வரத்து 800 கனஅடியில் இருந்து 3,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் 85 அடியில் இருந்து 92 அடியாக உயர்ந்தது.

இதனையடுத்து, அணையில் இருந்து மின்சாரம் எடுப்பதற்காக பவானி ஆற்றில் இருந்து 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து, மழை பெய்து வருவதால் ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...