அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதி செய்து கொடுத்த ஆசிரியர்கள்: திருப்பூரில் ருசிகரம்

திருப்பூர்: திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இலவச பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இலவச பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

ஊத்துக்குளி ரோடு, பாரப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில், 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 

கிராமப்புறத்தில் உள்ள இப்பள்ளிக்கு சுற்றுவட்டாரத்தில் இருந்து, நூற்றுக்கணக்கான மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர்.

குளத்துப்பாளையத்தில் இருந்து பாரப்பாளையம் பள்ளிக்கு 2.5 கி.மீ. தொலைவு செல்ல வேண்டும். இதனால், இப்பள்ளிக்கு வரும் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

பெற்றோரிடம் நிலையை எடுத்துக்கூறி ஆசிரியர்கள் மாணவர்களை பள்ளிக்கு வர வைத்தனர். இந்த சூழலில், குளத்துப்பாளையத்தில் இருந்து நடந்தும், சைக்கிள் மூலமாகவும் பள்ளிக்கு வரும், 50 மாணவர்களின் வசதிக்காக வாடகை பேருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



பள்ளி மேலாண்மை குழு, தன்னார்வலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், அன்னையர் குழு, தலைமை ஆசிரியர், கல்வியாளர், பேஸ்புக் நண்பர்கள் இணைந்து ஒரு பேருந்தை வாடகைக்கு எடுத்துள்ளனர்.

இந்த பேருந்து தினமும் குளத்துப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு வீடு, வீடாகச் சென்று ஒன்று முதல் ஐந்தாவது வரை படிக்கும் பள்ளி குழந்தைகளை அழைத்துச் சென்று பள்ளியில் விடும். அதே போல், மாலையில் வீட்டுக்கு சென்று அவர்களை வீட்டில் இறக்கி விடுவர்.



இந்த பேருந்துக்கான வாடகை மற்றும் எரிபொருள் செலவு என மாதம் ரூ.14 ஆயிரத்தை அனைவரும் பகிர்ந்து கொடுக்கின்றனர். ஏழை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இலவச பேருந்து வசதியை செய்து கொடுத்த நிகழ்வு மாணவர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...