கோவை வாசிகளே குடையுடன் செல்வது நல்லது : மூன்று நாட்களுக்கு மழை பெய்யுமாம்..!

கோவை: கோவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு தூரல் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு தூரல் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சிம்ப்ளிசிட்டி-க்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "கோவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். தூரல் மழைக்கு வாய்ப்புள்ளது. தொண்டாமுத்தூர், வால்பாறை போன்ற பகுதிகளுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.



இதனிடையே, பகல் நேர வெப்ப நிலையானது 29 முதல் 31 டிகிரி செல்சியசாகவும், இரவு நேர வெப்ப நிலை 22 முதல் 24 டிகிரி செல்சியாகவும் இருக்க வாய்ப்புள்ளது.

நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கனமழைக்கு வாய்ப்பு அதிகம். ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் குறைந்த அளவே மழை பெய்யும். கோவையில் காற்றின் வேகம் 10 முதல் 12 கிலோ மீட்டர் வரை வீச வாய்ப்புள்ளது." என்றார்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...