நடப்பு ஆண்டில் முதன் முறையாக நிறைந்து வழியும் சிறுவாணி அணை

கோவை: கோவை மக்களுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கும் சிறுவாணி அணை நடப்பு ஆண்டில் முதன் முறையாக நிறைந்து வழிகிறது.


கோவை: கோவை மக்களுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கும் சிறுவாணி அணை நடப்பு ஆண்டில் முதன் முறையாக நிறைந்து வழிகிறது. 



மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில், கடந்த மே, ஜூன் மாதங்களிலும், தென் மேற்கு பருவ மழையின் போதும் எதிர்பார்த்ததை விட கூடுதலான மழை பெய்தது. இதனால் கோவையைச் சுற்றியுள்ள நீராதாரங்கள் நிரம்பின.

கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையும் கடந்த 2-ம் தேதி அதன் முழு கொள்ளளவான 50 அடியை எட்டியது. இன்னும் பத்து நாட்களில் அணை நிரம்பி வழியும் என்று அன்றே அதிகாரிகள் தெரிவித்தனர்.



இந்த சூழலில், சிறுவாணி அணைக்கு நேற்று முதல் நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை 10 மணியளவில் அணை அதன் முழு கொள்ளளவையும் தாண்டி நிரம்பி வழிந்தது. 

இதன் மூலமாக, அடுத்த 6 மாதங்களுக்கு கோவை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சிறுவாணி அணையானது கடந்த 2014-ம் ஆண்டுக்கு பின் தற்போது நிரம்பி வழிவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள நீர், பில்லூர் அணைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...