பல்லடம் அருகே காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகைப் போராட்டம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சீரான குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்து ஊராட்சிமன்ற அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சீரான குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்து ஊராட்சிமன்ற அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

பல்லடத்தை அடுத்த சித்தம்பலம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த கிராமத்திற்கு கடந்த 3 மாதங்களாக சீரான குடிநீர் வழங்கவில்லை எனத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, கிராம மக்கள் பல முறை அரசு அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். தங்களது தேவைக்கு தண்ணீரை விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்தி வந்துள்ளனர். பலமுறை மனு அளித்தும் அரசு அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

இந்த நிலையில், ஆத்திரமடைந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் பல்லடம் ஊராட்சிமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் கந்தசாமியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய வட்டார வளர்ச்சி அலுவலர், கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து, கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...