பல்லடம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்த கடைகள், பேனர்கள் அகற்றம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்த கடைகள் மற்றும் பேனர்களை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்த கடைகள் மற்றும் பேனர்களை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். 

பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் உரிய அனுமதியின்றி பொதுமக்கள் பலர் கடைகள் மற்றும் பேனர்களை வைத்திருந்தனர். இதனை அகற்றுமாறு நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், கடைகளை யாரும் எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆர்., சாலையில் அனுமதியின்றி இருந்த கடைகள் மற்றும் பேனர்களை நகராட்சி அலுவலர்கள் அகற்றினர். அப்போது, பொதுமக்கள் எந்தவிதமான இடையூறும் ஏற்படுத்தாமல் இருக்கக் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

இதனிடையே, அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு வியாபாரிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவர்களை போலீசார் சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர். 

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...