மேட்டுப்பாளையத்தில் 35 ஆண்டுகள் பழமையான அரச மரத்திற்கு மறுவாழ்வு!

மரம் வளர்ந்த இடத்தின் தாய் மண் மட்டும் அதன் வேருடன் ஒட்டி இருக்கும் வகையில் மெல்ல மெல்ல அகற்றப்பட்ட இம்மரம், பின்னர் கிரேன் மூலம் எடுத்து செல்லப்பட்டு, அதே கோவிலுக்கு அருகில் உள்ள நந்தவனம் என்னுமிடத்தில் மீண்டும் பக்குவமாய் மறு நடவு செய்யப்பட்டது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில், வெட்டி அழிக்கப்படுவதை தடுக்கும் வகையில் 36 வயது அரச மரமொன்று பூமியில் இருந்து வேருடன் எடுக்கப்பட்டு மீண்டும் மறு இடத்தில் நடவு செய்யப்பட்டது.

மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானியாற்று கரையோர பகுதியான தேக்கம்பட்டி என்னும் அமைந்துள்ள அருள்மிகு வன பத்திரகாளியம்மன் கோவில் வளாகத்தில் பெரிய அரச மரமொன்று உள்ளது. தற்போது இக்கோவிலின் ராஜகோபுரம் அமைக்கும் திருப்பணி துவங்கியுள்ள நிலையில், இதற்காக இந்த அரச மரத்தை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.



மிகவும் செழிப்பாக காணப்படும் இம்மரம், இதுவரை கோவிலை தேடி வந்த பக்தர்களுக்கு நிழல் தந்து வந்த காரணத்தால் இதனை வெட்டி அழிக்க கோவில் நிர்வாகம் மிகவும் தயங்கியது. இதனை அறிந்த கோவையை சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பான ஓசை என்னும் தன்னார்வ அமைப்பு இம்மரத்தை காக்க முன்வந்தது.

அதன்படி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் அனுமதியுடன் இன்று மாலை கோவில் வளாகத்தின் முன் பகுதியில் இருந்த 36 வயதான இந்த பிரமாண்ட அரச மரம் நவீன தொழில் நுட்ப உதவியுடன் பூமியில் இருந்து அப்படியே வேருடன் மேல் நோக்கி எடுக்கப்பட்டது.



மரம் வளர்ந்த இடத்தின் தாய் மண் மட்டும் அதன் வேருடன் ஒட்டி இருக்கும் வகையில் மெல்ல மெல்ல அகற்றப்பட்ட இம்மரம், பின்னர் கிரேன் மூலம் எடுத்து செல்லப்பட்டு, அதே கோவிலுக்கு அருகில் உள்ள நந்தவனம் என்னுமிடத்தில் மீண்டும் பக்குவமாய் மறு நடவு செய்யப்பட்டது.

மிக மிக கவனத்துடன் மரத்தின் உயிர்த்தன்மை பாதிக்கப்படாமல் சுமார் நான்கு மணி நேரத்தில் இப்பணி நிறைவு பெற்றது. ஒரு அரச மரத்திற்கு இதன் மூலம் மறுவாழ்வு கிடைத்தது என்பதை விட, மரத்தை காக்க எடுக்கப்பட்ட இம்முயற்சி, மரங்களின் முக்கியத்துவத்தையும், அவற்றை காக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவே அமைந்தது எனலாம்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...