2-வது நாளாக நிரம்பி வழியும் பில்லூர் அணை : 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் நீரில் மூழ்கி சேதம்

கோவை: பில்லூர் அணையில் இருந்து விநாடிக்கு 15,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால், பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

கோவை: பில்லூர் அணையில் இருந்து விநாடிக்கு 15,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால், பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கான நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது, அணையின் நீர்வரத்து வினாடிக்கு 18,000 கனஅடியாக இருப்பதால், அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியில், தற்போது 98 அடிக்கும் மேலாக உயர்ந்தது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி அதன் உபரிநீர் பவானியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணையின் 4 மதகுகளும் திறக்கப்பட்டு, அதன்மூலம் விநாடிக்கு 14,000 கனஅடி நீர் பவானியாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆற்றின் வேகம் அதிகரித்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பிற்பகல் முதலே பவானியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் உடனடியாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையில் இருந்து பவானியாற்றில் வெளியேற்றப்படும் தண்ணீர், சிறுமுகை பகுதி வழியே ஈரோடு மாவட்ட எல்லையில் உள்ள பவானிசாகர் அணையைச் சென்றடைகிறது. இதனால், பவானிசாகர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்து, அதன் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இதனால், பவானிசாகர் அணையின் நீர்தேக்கப் பகுதிகளாக உள்ள லிங்காபுரம், காந்தபள்ளம், புதுக்காடு, மொக்கைமேடு, அம்மன்புதூர், பெதிக்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் பயிரடபட்டிருந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.



இன்னும் ஓரிரு வாரங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த வாழை மரங்கள் அனைத்தும் நீருக்கடியில் மூழ்கியதால், மேட்டுப்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட வாழை விவசாயிகள் பெரும் இழப்பில் சிக்கி தவிக்கின்றனர். அணையின் நீர்த்தேக்கப் பகுதிகளில் பொதுப்பணித் துறையினரின் அனுமதியோடு, வாழை சாகுபடி செய்துள்ள பல லட்சம் வரை கடன் பெற்று வாழை பயிரிட்ட நிலையில், இவையனைத்தும் ஒரே இரவில் நீருக்கு இறையாகியிருப்பது விவசாயிகளைக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...