'உங்களுக்கு மழை நீர், எங்களுக்கு கண்ணீர்' - மேம்பாலங்களுக்கு கீழ் தேங்கும் மழை நீரால் மக்கள் அவதி

கோவை: கோவையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேம்பாலங்களுக்கு கீழ் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீரை வெளியேற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை: கோவையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேம்பாலங்களுக்கு கீழ் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீரை வெளியேற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாநகரின் பிரதான மேம்பாலங்களாக அவினாசி மேம்பாலம், வட கோவை மேம்பாலம், கிக்கானி கீழ் பாலம், லங்கா கார்னர் ரயில்வே பாலம் ஆகியவை உள்ளன. மேம்பாலங்களுக்கு மேலேயும், கீழேயும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இதனிடையே, மேம்பாலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலே பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் மேம்பாலங்களுக்கு கீழ் செல்லும் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. மழை நீர் வடிகால் முறையாக பராமரிக்கப்படாததால், மழை நீர் தேங்கி சேறும் சகதியாக மாறிவிடுகிறது அந்த இடம். சில பாலங்களில் நீரை வெளியேற்ற மோட்டார் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சில நேரங்களில் மோட்டாரும் பழுதாகி விடுவதால் தேங்கி நிற்கும் நீரில், ஒரு படகு பயணம் போல் வாகன ஓட்டிகள் செல்கின்றனர்.



இது குறித்து வாகன ஒட்டி கார்த்திக் கூறுகையில், "மழை பெய்தால் மேம்பாலங்களின் கீழ் தண்ணீர் தேங்கிவிடுகிறது. இதனால் சேறும், சகதியுமான அந்த சாலையில் பயணம் செய்வதிற்குள் ஒரு வழியாகிவிடுகின்றனர் வாகன ஓட்டிகள். ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் இதே நிலைதான்.

வேறு வழியாகச் செல்லாம் என்றால் 3 முதல் 4 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதனால் பெட்ரோல் செலவு அதிகரிக்கிறது, நேரமும் விரயமாகிறது." என்றார்.

பயணிக்கும் போது மனதால் பாதிக்கப்படுக்கும் வாகன ஒட்டிகள், சில நேரங்களில் வாகனம் பழுதாகியும் சிரமப்படுகின்றனர். இதனால் வாகனம் பராமரிக்கும் செலவு அதிகரிக்கிறது என்று புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மற்றோரு வாகன ஒட்டி அருள்ராஜ் கூறுகையில், "மேம்பால சாலைகள், கீழ் சாலைகள் பராமரிப்பின்றி உள்ளதால் வாகனங்களின் டயர் தேய்மானமடைகிறது. குழிகளில் செல்ல வேண்டியுள்ளதால் சாக்-அப்சர் பழுதாகிறது. மழை நீர் இஞ்சினின் உட்பகுதிகுள் செல்வதால் வாகனம் அங்கேயே நின்றுவிடுகிறது. இந்த பிரச்சனையில் தற்காலிக நடவடிக்கை என்பது பெரிதல்ல.

வரும் காலங்களில் பாலங்கள் அனைத்தும் தொடர் பராமரிப்பில் வைத்திருக்க வேண்டும். இது ஒன்றே நிரந்தரமான தீர்வாகும்." என்றார்.

மேம்பாலம் பராமரிப்பு மாநகராட்சியின் கீழ் வருவதால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இதனை கண்டு கொள்வதில்லை. இருவரும் இனைந்து செயல்பட்டால் மட்டுமே இதற்கான முழு தீர்வு கிடைக்கும்.

பெயர் கூற விரும்பாத மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் இதற்கான நிரந்தர தீர்வு விரைவில் வரும். லங்கா கார்னர் பலத்தின் கீழ் மழை நீர் தேங்காமல் இருக்க வடிகால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதே போல் அனைத்து மேம்பாலங்களின் கீழும் மழை நீர் வடிகால் ஏற்படுத்தப்படும்." என்றார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...