கோவை மற்றும் நீலகிரியில் நேற்று பெய்த மழை அளவு, அணைகள் நிலவரம்: முழு விபரங்கள்

கோவை: கோவை மற்றும் நீலகிரியில் நேற்று பெய்த மழை அளவினை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் வெளியிட்டுள்ளன.

கோவை: கோவை மற்றும் நீலகிரியில் நேற்று பெய்த மழை அளவினை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் வெளியிட்டுள்ளன.

கோவை மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவின் விவரம் பின்வருமாறு:-

பீளமேடு 6 மி.மீ, பொள்ளாச்சி 35 மி.மீ, பெரியநாயக்கன்பாளையம் 3 மி.மீ, சூலூர் 2.20 மி.மீ, வேளாண் பல்கலை., 8 மி.மீ, சின்கோனா 98 மி.மீ, சின்னக்கல்லார் 75 மி.மீ, பரம்பிக்குளம் நீர்த் தேக்க பகுதி 49 மி.மீ, வால்பாறை 52 மி.மீ, கோவை தெற்கு 11 மி.மீ, மாவட்டத்தின் சராசரி அளவாக 28.27 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

அணைகள்: சின்னக்கல்லார் அணைக்கு நீர்வரத்து 2831.48 கன அடியாக உள்ளது. அங்கிருந்து 2831.48 கன அடி வெளியேற்றப்படுகிறது. நீரார் அணைக்கு நீர்வரத்து 272.57 அடியாக உள்ளது. அங்கிருந்து 528.94 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.



சோலையார் அணைக்கு 8572.11 நீர்வரத்து கன அடியாக உள்ளது. அங்கிருந்து பைபாஸ் வழியாக 2043.40 கன அடியும், சேடல் டேம் வழியாக 5982.64 கன அடியும், பரம்பிக்குளம் அணைக்கு 235.30 கன அடி நீரும், சோலையார் பவர்ஹவுஸ்-II வழியாக மின் உற்பத்திக்குப் பிறகு கேரளா செல்கிறது. இதில் சோலையார் அணை மற்றும் சிறுவாணி அணை அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையிலேயே உள்ளன.

நீலகிரி மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவின் விவரம் பின்வருமாறு:-

ஊட்டி 12.2 மி.மீ, நடுவட்டம் 36 மி.மீ, கல்லட்டி 12.5 மி.மீ, கிளன்மார்கன் 65 மி.மீ, குந்தா 34 மி.மீ, அவலாஞ்சி 156 மி.மீ, எமரால்டு 44 மி.மீ, கெத்தை 6 மி.மீ, கின்னக்கொரை 2 மி.மீ, அப்பர் பவானி 167 மி.மீ, குன்னூர் 6.8 மி.மீ, பர்லியாறு 5 மி.மீ, கேத்தி 9 மி.மீ, கோத்தகிரி 4.1 மி.மீ, கொடனாடு 22 மி.மீ, கூடலூர் 62 மி.மீ, தேவாலா 98 மி.மீ மழை பெய்தது.

மாவட்டத்தின் சராசரி மழை அளவாக 43.3 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...