கோவையின் வெவ்வேறு பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது

கோவை: மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இரண்டு குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.

கோவை: மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இரண்டு குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.

சிங்காநல்லூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதி, பீளமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி மற்றும் சரவணம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் சங்கிலி பறிப்பு வழக்குகள் நிலுவையில் இருந்தது.

இந்த வழக்குகளில், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க கோவை மாநகர காவல் துறை ஆணையர் பெரியய்யா உத்தரவிட்டார். அதன்படி, துணை ஆணையர் (குற்றப்பிரிவு) மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் அன்பரசு மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் சங்கிலி பறிப்பு தொடர்பாக வாகன தணிக்கை மற்றும் விசாரணைகளில் ஈடுபட்டு வந்தனர். அதேபோல், தனிப்படையினர் நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளில் இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர்.

இதில் மோட்டார் சைக்கிளில் வரும் நபர்கள் இரண்டு பெண்களிடம் நகை பறித்ததுச் சென்றது தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று காளப்பட்டி சாலையில் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக ஒரு சொகுசு காரில் வந்தவர்களை நிறுத்தி போலீசார் விசாரித்தனர்.

இதில் இருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் போத்தனூர் இட்டேரி பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவரது மகன் ஷாஜகான் (20), நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ரங்கநாதன் (27), என்பதும் தெரியவந்தது.

இவர்கள் இருவரும் கூட்டாக சேர்ந்து கோவை பகுதியில் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்டதுடன் குமரி மாவட்டத்தில் ஒரு வீட்டில் இருந்து புதிய காரை திருடியதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களையும் விசாரித்ததில் ஷாஜகான் நகை திருடுவதில் கில்லாடி என்பதும், அவர் மீது கோவை மாநகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. அதேபோல ரகு வீடு புகுந்து திருடுவதில் கைதேர்ந்தவராக இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனால் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து 25 பவுன் நகைகள் ஒரு சொகுசு கார், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனுடைய மொத்த மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...