ஈஷா அவுட்ரீச் சார்பில் வரும் 15-ம் தேதி இலவச கண்சிகிச்சை முகாம்

கோவை: கோவையில் ஈஷா அவுட்ரீச் சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம் மத்திபாளையத்தில் வரும் 15-ம் தேதி நடைபெற இருக்கிறது.

கோவை: கோவையில் ஈஷா அவுட்ரீச் சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம் மத்திபாளையத்தில் வரும் 15-ம் தேதி நடைபெற இருக்கிறது.

ஈஷா அவுட்ரீச் கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், தென்கரை மக்கள் பொதுநல சங்கம், லெவன் ஸ்டார்ஸ் கிரிக்கெட் அணி நண்பர்கள் நற்பணி மன்றம் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண்சிகிச்சை முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திபாளையத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் வரும் 15-ம் தேதி (ஞாயிறு) காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில் கண்புரை, மாறுகண், நீர்அழுத்தநோய், மாலைக்கண், சீழ் மற்றும் நீர்வடிதல், தூரப்பார்வை, கிட்டப்பார்வை போன்ற பிரச்சனைகளுக்கு இலவச பரிசோதனை செய்யப்படும். பரிசோதனைக்குப் பிறகு கண்புரை நோயாளிகள் கோவை அரவிந்த் கண்மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்படுவார்கள். இவர்களுக்கு I.O.I.லென்ஸ், சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து செலவு அனைத்தும் இலவசமாக வழங்கப்பட உள்ளது. மேலும், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து போன்ற பார்வைக்கோளாறு இருப்பவர்களுக்கு மிகக்குறைந்த விலையில் தரமான கண்கண்ணாடிகள் வழங்கப்படும்.

முகாமிற்கு வருபவர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டையின் நகல் எடுத்து வர வேண்டும். மேலும், விவரங்களுக்கு: 9442590058.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...