''இன்றைய அறிவியல் நாளைய தொழில் நுட்பம்" - நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சண்முகப்ரியா

நீலகிரி: ஊட்டியில் உள்ள கிரஸண்ட் கேஸில் பள்ளியில் இளம் அறிவியலாளர்களுக்கான இரண்டு நாள் சிறப்பு முகாம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இக்கண்காட்சியை நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சண்முகப்ரியா தொடங்கி வைத்தார்.



நீலகிரி: ஊட்டியில் உள்ள கிரஸண்ட் கேஸில் பள்ளியில் இளம் அறிவியலாளர்களுக்கான இரண்டு நாள் சிறப்பு முகாம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இக்கண்காட்சியை நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சண்முகப்ரியா தொடங்கி வைத்தார்.

இளம் அறிவியலாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்க வலியுறுத்தியும் ஆண்டுதோறும் நடத்தப்படும் இளம் அறிவியலாளர்களுக்கான 2 நாள் சிறப்பு முகாம் உதகையில் உள்ள கிரஸண்ட் கேஸில் பள்ளியில் நேற்று தொடங்கியது.



ஒன்றாம் வகுப்பு முதல் 11-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள் பங்கேற்றுள்ள இந்த அறிவியல் கண்காட்சியில் மாணவர்களின் பல்வேறு படைப்புகளைத் தவிர, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள படைப்புகள், கண்காட்சி குறித்த விளக்கக் கூட்டமும் நடைபெற்றது. 

இதில் நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சண்முகப்ரியா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''இன்றைய அறிவியல் நாளைய தொழில் நுட்பம்; இளம் விஞ்ஞானிகளுக்கு அது மிகப்பெரிய உயரத்தை அடைய உதவுகிறது. அறிவியல் கண்காட்சி, வெவ்வேறு துறைகளில் உள்ள திறமைகளை மாணவர்கள் மூலம் வெளி கொண்டு வர வழிவகை செய்கிறது.'' என்றார்.



பள்ளி தாளாளர் உமர் பரூக் பேசுகையில், ''இந்த கண்காட்சியில் தேர்வு பெறும் முதல் மூன்று படைப்புகள், மாநில மற்றும் தேசிய அறிவியல் போட்டிக்கு விரைவில் அனுப்பப்படும்.'' என்றார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...