கோவையில் பயிற்சியாளர் தள்ளியதில் பலியான மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

கோவை: கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது, பயிற்சியாளர் தள்ளியதில் உயிரிழந்த மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.



கோவை: கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது, பயிற்சியாளர் தள்ளியதில் உயிரிழந்த மாணவியின் உடல்  பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

கோவை அருகே நரசீபுரம் பகுதியில் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் நேற்று மாலை 4 மணி அளவில் தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியானது நடைபெற்றது. தேசிய பேரிடர் மேலாண்மையை சேர்ந்த பயிற்சியாளர் ஆறுமுகம் என்பவர் 20 மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வந்தார்.

கல்லூரியின் 2-வது மாடியில் இருந்து மாணவர்கள், மாணவிகள் கீழே விரிக்கப்பட்ட வலையில் குதித்து பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, பி.பி.ஏ., இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி லோகேஸ்வரி (18) என்பவர் மாடியில் இருந்து குதிக்க பயந்தபடி அமர்ந்திருந்தார். அவரை கீழே குதிக்கும்படி தெரிவித்த பயற்சியாளர் ஆறுமுகம், திடீரென மாணவியை கீழே தள்ளிவிட்டார். அப்போது, எதிர்பாராதவிதமாக முதலாவது மாடியின் சன்-சேடில் மாணவியின் கழுத்து பகுதி மோதி பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து, மாணவி லோகேஸ்வரி சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வழியில் மாணவின் உயிர் பிரிந்தது. ஆலாந்துறை காவல்நிலைய போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி லோகேஸ்வரியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. கல்லூரி நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில், பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோர்கள் மாணவியின் உடலைப் பெற்றுக் கொண்டனர். 

இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க பேரூர் காவல் ஆய்வாளர் மனோகரன், ஆலந்துறை காவல் ஆய்வாளர் தங்கம் தலைமையிலான இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.



Newsletter

பேரூராட்சி தலைவரிடம் சாலை, வடிகால் வசதி கோரிக்கை மனு அளித்த இடிகரை மகாலட்சுமி கார்டன் மக்கள்

இடிகரை பேரூராட்சி மணியக்காரன்பாளையம் வார்டு 6-க்கு உட்பட்ட மகாலட்சுமி கார்டன் பகுதியில் சாலை மற்றும் வடிகால் வசதி இல்லாத...

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...