தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் நிலவுகிறது : கோவையில் ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் வாசுகி பேட்டி

கோவை : தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டது போல சூழல் நிலவுவதாக ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் வாசுகி தெரிவித்துள்ளார்.


கோவை : தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டது போல சூழல் நிலவுவதாக ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் வாசுகி தெரிவித்துள்ளார். 

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி இன்று கோவை பிரஸ் கிளப் அரங்கில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- தமிழகத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது போல் சூழ்நிலை தற்போது உள்ளது. ஜனநாயகம், சமத்துவம், பெண்விடுதலை ஆகியவை கேள்விக்குறியாகியுள்ளன. மக்களை பாதிக்கும் வகையில், பல்வேறு திட்டங்கள் மாநிலத்தில் வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

குறிப்பாக, சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தில் விவசாய நிலங்களும், விவசாயமும், விவசாயிகளும் அழிக்கப்படுகின்றனர். இதில், ஏராளமான பெண் விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர். இந்த பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து கருத்து கேட்கவோ, கருத்து தெரிவிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தப் பகுதிகளில் அறிவிக்கப்படாத 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல, கோவை மக்களை பாதிக்கும் வகையில் சூயஸ் நிறுவனத்தோடு 24 மணி நேர குடிநீர் திட்டம் ரூ. 3,150 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 

மாநகராட்சி வசம் இதற்கான தொழில்நுட்பங்கள் கட்டமைப்புகள் இல்லை எனும்பட்சத்தில், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து, அவர்களிடமிருந்து கட்டமைப்புகளையும், தொழில்நுட்பத்தையும் உருவாக்கிக் கொண்டு குடிநீர் வினியோகத்தை அரசாங்கமே மேற்கொள்ளலாம். ஆனால், 26 வருடங்களுக்கு பல கோடி ரூபாய் நிதியில் பன்னாட்டு நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து இருப்பதால் பிரச்சினைகள் இன்னும் அதிகமாகவே வாய்ப்புள்ளது. 

மேலும், டெல்லியில் இந்நிறுவனம் திறம்பட செயல்படவில்லை. அப்பகுதி மக்கள் கட்டணம் செலுத்தாததால் குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது. எனவே, எதிர்காலத்தில் இதே நிலைமை மக்களுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. சமீபத்தில் வெளியாகியுள்ள சி.ஏ.ஜி., அறிக்கையில் செம்பரம்பாக்கம் ஏரி உடைப்பிற்கு மனிதத் தவறுகள்தான் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. அந்த ஏரியைப் பராமரித்து வந்தது சூயஸ் நிறுவனம் என்று அமைச்சர் கூறியுள்ளார். 

இதன் அடிப்படையில், கோவை மாநகராட்சி பன்னாட்டு சூயஸ் நிறுவனத்தோடு கையெழுத்திட்டுள்ள 24 மணிநேர குடிநீர் திட்ட ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். இத்திட்டம் பற்றிய முழுமையான தகவல்களும், ஒப்பந்த நகல்களும் தருவதற்கு மாநகராட்சி நிர்வாகம் மறுத்து வருகிறது, தகவல்களைக் கேட்பவரை வதந்தி பரப்புவதாகக் கூறி கைது செய்கிறது. இதுபோன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட உள்ளது, என்றார்.

மேலும், அவர் பேசுகையில், "சி.ஏ.ஜி.,யின் அறிக்கையில் ஈஷா யோகா மையம் கட்டப்பட்டத்தில் உள்ள பல்வேறு விதிமீறல்கள் குறித்தும், அதற்கு அரசு துணைபோவது குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளது. இவற்றை ஆய்வு செய்து விதிகளைப் பின்பற்றாத ஈஷா மையம் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு கேட்டுக்கொண்டார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...