கோவையில் நடத்தப்பட்ட சோதனையில் 4-வது முறையாக 250 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

கோவை: கோவையில் உணவு பாதுகாப்புக்கு துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ குட்கா போதை பொருட்கள் நான்காவது முறையாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்து.

கோவை: கோவையில் உணவு பாதுகாப்புக்கு துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ குட்கா போதை பொருட்கள் நான்காவது முறையாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்து.



தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில், கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா குறித்த ஆய்வினை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கோவை தாமஸ் வீதி பகுதியில் வாகாராம் என்பவர் சிறிய அறை ஒன்றை எடுத்து, ஊதுபத்தி குடோனாக பயன்படுத்துவதாகக் பயன்படுத்தி வந்துள்ளார். 

ஆனால், அங்கு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை மறைத்து வைத்து விநியோகம் செய்வதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, காவல்துறை உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு குட்கா, பான்மசாலா, போன்ற தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். 

இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது :- சுமார் 250 கிலோ எடையுடைய குட்கா, பான்மசாலா போன்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்துள்ளோம். இதன் மதிப்பு சுமார் ரூ. 2 லட்சம் இருக்கக்கூடும். தொடர்ந்து தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா பொருட்கள் பதுக்கல்களைக் கண்டுபிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம், என்றார்.

கடந்த 20 நாட்களில் மட்டும் கோவையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், சுமார் மூன்றரை டன் எடையுடைய தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...