ஆத்துப்பாலத்தில் பெயர் பலகை அங்கீகாரம் பெற்ற நொய்யல் ஆறு : சமூக ஆர்வலர்கள் வரவேற்பு

கோவை : உக்கடத்தை அடுத்த ஆத்துப்பாலம் அருகே நொய்யல் ஆற்றின் பெயர் பலகையை வைத்த கோவை மாநகராட்சியின் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கோவை : உக்கடத்தை அடுத்த ஆத்துப்பாலம் அருகே நொய்யல் ஆற்றின் பெயர் பலகையை வைத்த கோவை மாநகராட்சியின் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

கோவையின் முக்கிய ஆறுகளில் ஒன்றாக திகழ்ந்து வருவது நொய்யல் ஆறாகும். அழிவின் பாதைக்கு சென்று, மீண்டும் மறுவாழ்வு பெற்றுள்ள இந்த ஆறு, தற்போது பெய்யும் தொடர் மழையால் நிரம்பி வழிகிறது. சிறுவாணி மலை அடிவாரத்தில் உருவாகும், இந்த ஆறு பேரூர் வழியாக ஆத்துப்பாலத்தை கடந்து பாய்கிறது. இந்த நிலையில், நொய்யல் ஆற்றை செழிப்பாக மாற்ற உதவிய சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள், ஆத்துப்பாலம் அருகே 'நொய்யல் ஆறு' என்ற பெயர் பலகையைப் பொருத்த கோவை மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர். 

இதனை ஏற்ற மாநகராட்சி நிர்வாகம், ஆத்துப்பாலம் அருகே நொய்யல் ஆற்றின் பெயர் பலகையைப் பொருத்தியது. இந்த நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், ஆத்துப்பாலத்தின் பெயரை, 'நொய்யல் ஆத்துப்பாலம்' என மாற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கையும் விடுக்கப்பட்டது. 

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...