டீசல் விலை உயர்வைக் கண்டித்து வரும் 20-ம் தேதி முதல் லாரிகள் வேலைநிறுத்தம்

கோவை: டீசல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி., வரி விதிப்பு, அதிக சுங்கக் கட்டண வசூல் ஆகியவற்றைக் கண்டித்து வரும் 20-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்க சம்மேளனம் அறிவித்துள்ளது.


கோவை: டீசல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி., வரி விதிப்பு, அதிக சுங்கக் கட்டண வசூல் ஆகியவற்றைக் கண்டித்து வரும் 20-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்க சம்மேளனம் அறிவித்துள்ளது.



கோவை லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் வடகோவையில் இன்று நடைபெற்றது. 

அதில், தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்க சம்மேளனத்தின் தலைவர் குமாரசாமி பேசியதாவது :- மத்திய அரசைக் கண்டித்து வரும் 20-ம் தேதி காலை 6 மணி முதல் அகில இந்திய அளவில் லாரிகள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதில், கோவை லாரி உரிமையாளர்கள் திரளாக பங்கேற்றமுடிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சுமார் 10,000 லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.



டீசல் விலையை ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். டீசல் விலை ஏற்றம், மூன்றாம் நபர் காப்பீடு உயர்வு, சுங்கவரி கட்டண உயர்வு ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் லாரிகள் ஸ்டிரைக் நடைபெறவுள்ளது. 

விரைவில் டேங்கர் லாரிகள், கண்டெய்னர்கள், மினி ஆட்டோக்கள் உள்ளிட்டவையும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க ஆதரவு தர உள்ளனர். இந்த வேலைநிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு 300 முதல் 400 கோடி வரை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது," என்றார்.

மேலும், வரும் 20ம் தேதியன்று தங்களுக்கு ஆதரவாக ஒருநாள் மட்டும் பொதுமக்களும் தங்களது வாகனங்களை இயக்காமல் ஆதரவு தர வேண்டும்.' என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தால், பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...