திருப்பூரில் வீட்டின் உரிமையாளரைத் தாக்கி மனைவியின் தங்கசங்கிலியை பறித்துச் சென்ற கொள்ளையர்கள்

திருப்பூர்: திருப்பூர் அருகே நள்ளிரவில் வீட்டில் இருப்பவர்களைத் தாக்கிவிட்டு, பெண்ணின் கழுத்தில் இருந்த இரண்டரை சவரன் நகையை கொள்ளையர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: திருப்பூர் அருகே நள்ளிரவில் வீட்டில் இருப்பவர்களைத் தாக்கிவிட்டு, பெண்ணின் கழுத்தில் இருந்த இரண்டரை சவரன் நகையை கொள்ளையர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



மங்கலம் சாலை ஆண்டிபாளையம் அருகே ஜான்ஜோதி கார்டன் பகுதியில் வசித்து வருபவர் பனியன் கம்பெனி அதிபர் பாலகிருஷ்ணன். இவர் தனது மனைவி சுப்புலட்சுமி, மகன் கோகுலுடன் வீட்டின் உள்அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். 

இன்று அதிகாலை 2 மணியளவில், வீட்டின் பூட்டை உடைக்கும் சத்தம் வந்ததை அறிந்த பாலகிருஷ்ணன் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது, இரண்டு முகமூடி கொள்ளையர்கள் திடீரென வீட்டினுள் நுழைந்து பாலகிருஷ்ணனை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதனால், அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். 

இந்த நிலையில், சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட அவரது மகன் மற்றும் மனைவி சுப்புலட்சுமியையும் அந்தக் கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர். பின்னர், சுப்புலட்சுமி அணிந்திருந்த இரண்டரை சவரன் நகையைக் கொள்ளையர்கள் பறித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். 



இதைத்தொடர்ந்து, முகமூடி கொள்ளையர்கள் அருகே இருக்கும் செந்தில் நகர் குடியிருப்பு பகுதிகளில் உள்ள 3 வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அங்கு வீட்டின் கதவை திறக்க முடியாததால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். 



இந்த முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசத்தால் ஜான் ஜோதி கார்டன், செந்தில் நகர் மக்கள் பீதியில் உள்ளனர். மேலும், இந்த சம்பவம் பற்றி திருப்பூர் மத்திய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...