கோவை குற்றாலம் அருகே வேரோடு சாய்ந்த மரங்களை அகற்றிய ஊழியர்கள்

கோவை : கோவை குற்றாலம் அருகே பலத்த காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக வேரோடு சாய்ந்த மரங்களை ஊழியர்கள் அகற்றினர்.

கோவை : கோவை குற்றாலம் அருகே பலத்த காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக வேரோடு சாய்ந்த மரங்களை ஊழியர்கள் அகற்றினர். 



போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், அப்பகுதியில் இருந்த தேக்கு, பாக்கு மற்றும் புளிய மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால், உயர்மின் அழுத்த மின்கம்பிகள் அறுந்து, அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகள் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும், மின்சார வயர்களை சரிசெய்யும் பணிகளை மேற்கொண்டனர். அங்கு வீசி வரும் பலத்த காற்று காரணமாக மரங்களை அகற்றும் பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டது. 



மேலும், கோவை குற்றாலப்பகுதிகளில் தொடர் மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக இன்று சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. 20 நாட்களுக்கும் மேலாக தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...