குன்னூரில் முப்படை ராணுவ வீரர்களுக்கான தொடர் ஓட்டப் பந்தயம்: ராணுவ சிவப்பு படை வெற்றி

நீலகிரி: குன்னூர் அருகே அமைந்துள்ள மெட்ராஸ் ரெஜிமெண்ட்டல் சென்டரில் அமைந்துள்ள தங்கராஜ் விளையாட்டு அரங்கில் முப்படை ராணுவ வீரர்களுக்கான தொடர் ஓட்டப் பந்தயம் இன்று காலை ஆறு மணிக்கு தொடங்கியது.

நீலகிரி: குன்னூர் அருகே அமைந்துள்ள மெட்ராஸ் ரெஜிமெண்ட்டல் சென்டரில் அமைந்துள்ள தங்கராஜ் விளையாட்டு அரங்கில் முப்படை ராணுவ வீரர்களுக்கான தொடர் ஓட்டப் பந்தயம் இன்று காலை ஆறு மணிக்கு தொடங்கியது.

இதில் முப்படை அளவிலான நான்கு குழுக்கள் பங்கேற்றன. இந்த ஓட்டப் பந்தயம் முப்படை வீரர்களின் வேகம், உடல் திறன், மற்றும் திறமையை வெளிக்காட்டும் விதமாக நடத்தப்படுகிறது. இதில் பங்கு பெறும் ஒவ்வொரு குழுவும் ஆறு பந்தய வீரர்களை கொண்டது. மொத்தம் இருபத்து நான்கு வீரர்கள் பங்கேற்கும் ஓட்டப் பந்தயமானது பத்து கிலோ மீட்டராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில், தனிநபர் வெற்றியாக ராணுவ சிவப்பு படையைச் சேர்ந்த சிப்பாய் அனில்குமார் யாதவ் 31 நிமிடம் 44 வினாடிகளில் கடந்து முதல் இடத்தைப் பிடித்தார். ராணுவ சிவப்பு படையைச் சேர்ந்த அவில்தார் அனிஷ் தாபா இரண்டாம் இடத்தையும், அதே சிவப்பு படையைச் சேர்ந்த நாயக் தீர்த்த குமார் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். 



அதன்படி, நடப்பு ஆண்டுக்கான வெற்றி கோப்பையை சிவப்பு படை அணியினர் கைபற்றி சென்றனர்.



Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...