கோவை-அவினாசி சாலையில் அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் மோதி விபத்து: தனியார் பேருந்து ஓட்டுனர் மீது குற்றச்சாட்டு

திருப்பூர்: கோவை-அவினாசி சாலை தெக்கலூர் அருகே அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் மோதிய விபத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர்.

திருப்பூர்: கோவை-அவினாசி சாலை தெக்கலூர் அருகே அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் மோதிய விபத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர்.

தெக்கலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த மினி வேன் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்து, அந்த வேனின் பின்னால் வந்த மூன்று கார்கள் நிறுத்தப்பட்டன. ஆனால், அங்கு அதிவேகமாக வந்த தனியார் பேருந்து சாலையில் நின்ற கார்களின் மீது மோதியது.

இதனால், கார்கள் ஒன்றின் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஐந்து பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்துக்குள்ளானவர்களை மீட்ட அப்பகுதி மக்கள் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தனியார் பேருந்தின் அதிவேகமே விபத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து தெக்கலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...