அடிப்படை வசதிகள் வேண்டி திருப்பூர் ஆட்சியரிடத்தில் பொதுமக்கள் மனு

திருப்பூர்: அடிப்படை வசதிகள் அமைத்து தரக்கோரி காளிபாளையம் பகுதி மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

திருப்பூர்: அடிப்படை வசதிகள் அமைத்து தரக்கோரி காளிபாளையம் பகுதி மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் விஜயாபுரம் அருகில் உள்ள காளிபாளையம் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட அருந்ததியின குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கக் கூடிய மக்களுக்கு அடிப்படை வசதிகளான சாக்கடை வசதிகள், தார் சாலை வசதிகள் இல்லை என்றும், பள்ளிக்குச் செல்லக்கூடிய குழந்தைகளுக்கு பேருந்து வசதிகள் இல்லை என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக, அரசு அதிகாரிகளைச் சந்தித்து பலமுறை மனு கொடுத்ததும் பயனில்லை என்றும், வாக்கு கேட்டு மட்டும் வரக்கூடியவர்கள் வெற்றி பெற்ற பின்னர் தங்களது பகுதிகளைக் கண்டு கொள்வதில்லை என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "நல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட எங்களது கிராமத்தில் சுமார் ஐந்து வருடமாக அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா இல்லை. தற்போது தான் பட்டா கொடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்த பிரச்சனை குறித்து நல்லூர் நகராட்சியில் 10-க்கும் மேற்பட்ட முறை மனு அளிக்கப்பட்டுள்ளது. எந்த நடவடிக்கைகளும் எடுக்காத நிலையில் மாவட்ட ஆட்சியரிடம் 10-க்கும் மேற்பட்ட முறை மனு அளித்தும் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.​ இந்தமுறை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம்." என்றனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...