பவானியாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை -தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் தயார் நிலையில் இருக்க உத்தரவு

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நிரம்பியதால் பவானியாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நிரம்பியதால் பவானியாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை கடந்த 4-ம் தேதி நிரம்பியது. அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியை நீர்மட்டம் எட்டியதால் அன்று முதலே அணையின் பாதுகாப்பு கருதி அதன் உபரி நீர் அப்படியே பவானியாற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. 



இன்று காலை முதல் மதியம் வரை அணையின் நீர்வரத்தான 8000 கனஅடி நீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணையின் நீர்வரத்து திடீரென 22,000 கன அடியாக உயர்ந்தது. இதனால் அணையின் நான்கு மதகுகளும் திறக்கப்பட்டு அதன் வழியே தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்வரத்து அப்படியே வினாடிக்கு 22,000 கனஅடி என பவானியாற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 



இதனையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிகரன், பவானியாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கையை வெளியிட்டு, கரைபுரண்டு ஓடும் பவானியாற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவித்துள்ளார். தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் தயார் நிலையில் இருக்கவும் கரையோர பகுதிகளைக் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...