உலக இதய நாள் (WORLD HEART DAY)

செப்டம்பர் 29ம் நாளன இன்று உலகம் முழுவதும் உலக இதய நாள் (WORLD HEART DAY) கொண்டாடப்பட்டு வருகிறது. 

இதய நோய் பற்றிய தாவல்:
இந்தியாவில் இதய நோய் வருவதற்கான வாய்ப்பு 20 வயது ஆக குறைந்துள்ளது என்று புதிய ஆய்வு அறிக்கை கூறுகிறது. இளைஞர்களுக்கும் ஏன் குழந்தைகளுக்கு கூட இதயநோய் பாதிக்க துவங்கியுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இதுக்குறித்து நாம் சிந்தித்திருக்க மாட்டோம். டெல்லி,மும்பை, பெங்களூர் உள்ளிட்ட மாநகரங்களில் தாங்கள் நடத்திய சர்வேயில் இதய நோய் வருவதற்காக வாய்ப்பு 20 வயதாக குறைந்துள்ளது என்று டெல்லி பி.எல்.கே சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குநரும் முதன்மை மருத்துவரான டாக்டர் நீரஜா பாலா கூறுகிறார்.

முன்பெல்லாம் பெண்களிடம் இதய நோய் மூலம் ஏற்படும் மரணத்தின் சதவீதம் குறைவாக இருந்தது. தற்போது அதுவும் மாறிவிட்டதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.  ‘பெண்கள், குழந்தைகளிடம் இதய நோய் உருவாவதை தடுப்போம்’ என்பதுதான் 2012 உலக இதய தினத்தின் முக்கிய முழக்கமாகும்.
 இதய நோய்கள் மூலம் (cardiovascular diseases (CVD) மரணிப்பவர்களில் 3இல் ஒருவர் பெண் ஆவார். உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில், இருதய நோயால் ஏற்படும் இறப்புகள் தான் அதிகம் என்று உலக சுகாதார நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. ஆண்டுதோறும் 1 கோடியே73 லட்சம் பேர் இறக்கின்றனர். மலேரியா,எச்.ஐ.வி., மற்றும் டி.பி., ஆகியவற்றால் 38 லட்சம் பேர் மட்டுமே இறக்கின்றனர் என்கிறது புள்ளிவிபரம். உலகில் ஆண்டுக்கு 10 லட்சம் குழந்தைகள், பிறக்கும் போதே இருதய குறைபாட்டுடன் பிறக்கின்றன. உலகில் 10 மாணவர்களில் ஒருவர், அதிக எடை உள்ளவர்களாக உள்ளனர்.

உலகில் முதலிடம் வகிக்கும் உயிர்கொல்லி மாரடைப்பு என்னும் கொடிய நோயினால் வருத்தத்திற்கு  17 மில்லியன் மக்கள் இறந்து கொண்டு இருக்கின்றனர். அதாவது, உலகில் மொத்த இறப்பு 29 சதவீதம் ஆகிறது. அதில் 82 சதவீதம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள நாடுகளிலும், வளரும் நாடுகளிலும் காணப்படுகிறது.  இந்நிலையில், செப்டம்பர் 29ம் நாளன இன்று உலகம் முழுவதும் இதய நாள் கொண்டாடப்படுகிறது. 


இதயத்திற்கு மூலிகையில் உள்ள மருத்துவம்:

மூலிகைகளால் முடியாதது எதுவும் இல்லை. நீங்க நினைத்தால் தினந்தோறும் சில நடைமுறைகளை ஒழுங்கா பின்பற்றினாலே எந்தவித நோ‌ய் நொடியும் இல்லாம நீங்கள் வாழ முடியும். முதலில் இதய நோ‌ய் வராமலும், நோ‌ய் வந்தபின் இதயத்தை எப்படி பாதுகாப்பது என்பதை பற்றி பார்ப்போம்.



செம்பருத்தி பூவின் மருத்துவ குணம்:
இதய நோயை குணப்படுத்துவதில் இயற்கை மருத்துவத்துக்கு தனிப்பெரும் பங்கு உண்டு. வீடுகளில் வளர்க்கப்படும் செம்பருத்தி பூவின் இதழ்களை மட்டும் தனியாக எடுத்து காலையில் கண் விழித்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இதய நோ‌ய்க‌ள் வராமல் தடுக்க முடியும். ஏற்கனவே இதய நோ‌ய் வந்தவர்களும் இந்த இதழ்களை சாப்பிட்டு வந்தாலும் நோயின் பாதிப்பு மெல்ல மெல்ல குறையும்.


இதய நோ‌ய் தீவிரமாக இருப்பவர்க‌ள் செம்பருத்தி பூக்களின் இதழ்களை மட்டும் எடுத்து அதன்மீது எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். பிறகு சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். பாகு பதத்தில் வந்ததும் இறக்கி வடிகட்டி வைத்துக்கொ‌ள்ள வேண்டும். அதனுடன் தேவையான அளவு நீர் சேர்த்து தினமும் காலை கண்விழித்ததும் அருந்தி வந்தால் இதய நோயின் தீவிரத்தை குறைக்க முடியும். மற்றபடி,வெறுமனே செம்பருத்திப் பூ இதழ்களை நீர் விட்டு கா‌ய்ச்சி சர்க்கரை சேர்த்து அருந்தி வந்தாலும் இதய நோயின் தீவிரம் குறையும். ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பை இஞ்சி சரி செ‌ய்கிறது. அந்தவகையில், இஞ்சிச்சாறு அல்லது இஞ்சி ஜூஸ் அருந்தி வந்தாலும் இதய நோயிலிருந்து உங்களை காத்துக்கொ‌ள்ளலாம்.


இஞ்சிச்சாறு எனும்போது வெறுமனே அருந்துவதைவிட தண்ணீரும், தேனும் சேர்த்து அருந்தலாம். இஞ்சி ஜூஸ் எப்படி தயாரிக்க வேண்டும் என்றால் இஞ்சிச்சாறு எடுத்து அதனுடன் தண்ணீர், எலுமிச்சைசாறு, தேன், சர்க்கரை சேர்த்தால் ஜூஸ் ரெடி. இஞ்சியை துவையல், ஊறுகா‌ய் மற்றும் சுக்கு என பல வடிவங்களில் உணவில் சேர்த்துக் கொண்டாலும் இதய நோயை வெல்லலாம்.



தாமரை மலரின் மருத்துவ குணம்:
தாமரை மலரின் இதழ்களை நீரில் போட்டு கொதிக்க வைத்து அருந்தி வந்தாலும் இதய நோ‌ய் குணமாகும். உடலில் உ‌ள்ள கொழுப்புச்சத்தை பூண்டு எளிதாக குறைக்கக்கூடியது. தொடர்ந்து 3 மாதங்க‌ள் வெ‌ள்ளைப்பூண்டு சாப்பிட்டு வந்தால் உரிய நிவாரணம் கிடைக்கும். பொதுவாக வெ‌ள்ளைப்பூண்டை பச்சையாக சாப்பிடுவதைவிட வேக வைத்தோ, தீயில் சுட்டோ சாப்பிடுவது நல்லது.


தாமரை இலையை கஷாயம் செ‌ய்து குடித்து வந்தால் இதய படபடப்பு, மேல் சுவாசம், படபடப்பு சரியாகும். சின்ன வெங்காயத்தை சாறு எடுத்து சர்க்கரை சேர்த்து அருந்தி வந்தால் இதயம் பலப்படும். தொடர்ந்து 7 நாட்க‌ள் செ‌ய்து வந்தால் உரிய நிவாரணம் கிடைக்கும்.

இதய நோய்க்கான காரணங்கள்
1.உடற்பயிற்சி இன்மை
2.கொழுப்பு அதிகமான உணவுப்பொருட்களை உண்ணும் பழக்கம்.
3.மதுபானம், புகைப்பிடித்தல்
4.பணிகள் காரணமாக உருவாகும் மன அழுத்தங்கள்

எவ்வாறு தடுக்கலாம்?
நோ டென்சன் ரிலாக்ஸ்
உடல் பருமன், அதிக ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் இருப்பது, ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிவது போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு மாரடைப்பு வர அதிக வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். பெரும்பாலான நோய்களின் நிவாரணியே மௌனம், தியானம், நிதானம்தான்! எப்போதும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம்.

இன்றைய பணிச் சூழலில் மனஅழுத்தம் மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாகிறது. எனவே எந்த செயலையும் அழுத்தமின்றி செய்ய பழகிக் கொண்டாலே இருதயத்தில் அழுத்தமோ, டென்சனோ ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

Newsletter

ஜெர்மனியில் 2027ல் நடக்கும் உலோகத் தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு

ஜெர்மனியில் 2027 ஜூன் 21 முதல் 25 வரை The Bright World Of Metals சர்வதேச கண்காட்சி நடக்கிறது. கோவை கொடிசியாவில் நடந்த செ...

Ganja Chocolate Offender Detained Under Goondas Act in Coimbatore

Mossam Kumar, 30, who was arrested for allegedly possessing 5.250 kg of ganja and ganja chocolates for sale in the Maduk...

கோவையில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் 5.250 கிலோ கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த மோசம் குமார் என்பவர் கைது செ...

கிணத்துக்கடவு இளைஞர் கொலை வழக்கில் கைதான மாதேஷ் குண்டர் சட்டத்தில் கைது

பொள்ளாச்சி அருகே சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் அஸ்வின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 21 வயது மாதேஷை, கோவை...

Kinathukadavu Murder Accused Detained Under Goondas Act

Mathesh, 21, who was arrested in connection with the murder of a 22-year-old man in Kinathukadavu, Coimbatore district,...

Coimbatore Police Constable M. Vijay Wins Gold at State-Level Anti-Sabotage Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS) won the gold medal in t...