5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தையை 15 நாட்கள் மத்திய சிறையில் அடைக்க மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.


கோவையில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட வளர்ப்பு தந்தையை 15 நாட்கள் மத்திய சிறையில் அடைக்க மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

சென்னையை சேர்ந்த உஷா என்பவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு இவாஞ்சலின்  என்கிற ஐந்து வயது  மகள் உள்ளது.  இந்நிலையில் உஷா, சென்னையில் மகேந்திரன் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரும் குழந்தையோடு கோவை காட்டூர் ராம்நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். இந்நிலையில் உஷா வேலை நிமித்தமாக குழந்தையை மகேந்திரனிடம் ஒப்படைத்து விட்டு ஊருக்குசென்றுள்ளார். 

இந்நிலையில் கடந்த திங்களன்று இரவு மயக்கநிலையில் இவாஞ்சலினை உடல்நிலைசரியில்லை என்று கோவை அரசு மருத்துவமனைக்கு மகேந்திரன் கொண்டு வந்துள்ளனர். உடலில் காயங்களோடு இருந்த இவாஞ்சலின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த சிறிது நேரத்தில் இறந்துள்ளது.  

இதனைத்தொடர்ந்து இறந்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 

இதனையடுத்து காந்திபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துவிசாரனைமேற்கொள்கையில் வளர்ப்பு தந்தை மகேந்திரன் தலைமறைவாகியிருந்தது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து சென்னைக்கு தப்பிக்க முயன்ற மகேந்திரனை காட்டூர் போலீசார் கைது செய்தனர்.  இதை தொடர்ந்து மகேந்திரன் மீது பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி 15 நாட்கள் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.  ஐந்து வயது சிறுமியை வளர்ப்பு தந்தையே பாலியல் பலாத்கார கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுகொலை செய்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை நீதிமன்ற வளாகத்தில் கைகலப்பு; போலீசார் விசாரணை

கோவை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞரின் காரின் நான்கு டயர்களிலும் காற்றை இறக்கியதாக கூறப்படும் விவகாரத...

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...