இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தை மாற்ற முடியாது - கே.எம். காதர் மொகிதீன் கண்டனம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

மத்திய அரசு இந்திய வர லாற்றில் இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்திற்கு எதிரான ஒரு விஷயத்தை உச்சநீதிமன்றத்தில் துவக்கிவைத்துள்ளது.  இது தவறு மட்டுமல்ல; மாபெரும் தவறு; இமாலயத் தவறு.  இஸ்லாமிய ஷரீஅத் சட்டமானது திருக்குர்ஆன் அடிப்படையிலும், திரு நபி (ஸல்) அவர்களின் போதனைகளின் அடிப் படையிலும் உருவாக்கப்பட்டவை.  உலகம் முழுவதும் 1500 ஆண்டு காலமாக முஸ்லிம்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த ஷரீஅத் சட்டத்தில் உள்ள சில பகுதிகளை குறிப்பாக விவாகரத்து, பலதார மணம் போன்றவற்றை எதிர்த்தும் இந்தியாவில் அந்தப் பிரிவுகள்  இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தில் இருக்கத் தேவை இல்லை என்றும் கூறும் வகையில் மத்திய அரசின் போக்கு அமைந்துள்ளது. இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்துக்குரிய உண்மையான விளக்கத்தைத் தருவதற்கு  மார்க்க மேதைகளான உலமாக்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை இஸ்லாமிய சட்டங்களுக்கு நீதிமன்றம் மற்றும் அரசாங்கங்கள்  தருகின்ற விளக்கங்களை இந்திய முஸ்லிம்கள் ஏற்க வேண்டும் என்பதைப் போல் மத்திய அரசின் நிலைப்பாடு இருக்கிறது. இஸ்லாமிய சட்டம் குர்ஆன், நபி மொழி அடிப் படையில் அமைந்தது. இதை விளக்கி, விவரித்து தெளிவுபடுத்த வேண்டியவர்கள் மார்க்க மேதைகளான உலமா பெருமக்கள்தான். 

எந்த ஒரு முஸ்லிம் நாட்டு அரசும் இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்திற்கு தருகிற விளக்கத்தை விரிவுரையை இந்திய முஸ்லிம்கள் ஒருபோதும் ஏற்றதில்லை.  ஷாபானு வழக்கின்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திசூட் அவர்கள், குர்ஆனின் வசனத்திற்கு புதியதொரு விளக்கம் தருவதற்கு முற்பட்டபோது, இந்தியாவில் உள்ள மார்க்க மேதைகளும், முஸ்லிம் சமுதாயமும் வன்மையாக எதிர்த்து வரலாறு படைத்திருக்கிறது. இந்திய முஸ்லிம்கள் இஸ்லாமிய ஷரீஅத்தை பின் பற்றுவதற்கு பாகிஸ்தான், பங்களாதேசம், ஆப்கானிஸ்தான், எகிப்து, ஈராக் போன்ற நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் ஏற்கப்போவதில்லை. உதாரணமாக லிபியாவில் அன்று ஆட்சி செய்த கடாபி தனது நாட்டில் உள்ள தொழிற் சாலை ஊழியர்கள் பளுவான வேலைகளில் ஈடுபடுவதால் ரமளான் மாதத்தில் நோன்பு வைக்கத் தேவையில்லை என்று சட்டம் இயற்றினார். உடனே முஸ்லிம் உலமாக்கள் அதை எள்ளி நகையாடினர்களே தவிர, அதை ஏற்றுக் கொள்ளவில்லை.  

பிற முஸ்லிம் நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் இந்திய முஸ்லிம்களுக்கு மார்க்க விஷயங்களில் வழிகாட்டிகளாக ஆகமுடியாது.  இந்திய அரசு பாகிஸ்தான் நாடு ஒரு பயங்கரவாத நாடு என்று வர்ணிக்கிறது. அதை உண்மை  என உலகில் உள்ள பெரும்பான்மை நாடுகள் இன்றைய தினம் ஏற்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு முஸ்லிம் நாடு பயங்கர வாதத்தை ஆதரிப்பதால் இந்திய முஸ்லிம்கள் அந்த பயங்கரவாதத்தை ஏற்பார்களா? ஓராயிரம் அறிஞர் பெரு மக்கள் இந்த பயங்கர வாதத்தை எதிர்த்து கண்டன அறிக்கை வெளியிட்டிருப்பது இந்தியாவில் தான். மத்தியில் ஆளக் கூடிய பா.ஜ.க. அரசு தனது கனவுத் திட்டமான ஒரேவிதமான சிவில் சட்டத்தை  நாட்டிலே கொண்டு வந்து அமுல்படுத்தி  இந்திய முஸ்லிம்களை அவர்கள் உயிரினும் மேலாக மதிக்கின்ற ஷரீஅத் சட்டத்திலிருந்து பிரித்து விடலாம் என்று கருதினால், அது கற்பனை; அது நாட்டிலே நடக்காத ஒன்று. தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர், சமீபத்தில்  ஒரு எச்சரிக்கை செய்துள்ளார். அதையே இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ‘‘மத்திய அரசு பொது சிவில் சட்டம் என்ற போர்வையில் குளவிக் கூட்டை கலைக்க வேண்டாம்’. இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தனது அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...

கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக்...

ஜெர்மனியில் 2027ல் நடக்கும் உலோகத் தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு

ஜெர்மனியில் 2027 ஜூன் 21 முதல் 25 வரை The Bright World Of Metals சர்வதேச கண்காட்சி நடக்கிறது. கோவை கொடிசியாவில் நடந்த செ...

Ganja Chocolate Offender Detained Under Goondas Act in Coimbatore

Mossam Kumar, 30, who was arrested for allegedly possessing 5.250 kg of ganja and ganja chocolates for sale in the Maduk...

கோவையில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் 5.250 கிலோ கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த மோசம் குமார் என்பவர் கைது செ...