மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவர்: 6 பேருக்கு மறுவாழ்வு

கோவை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர் நிர்மல் குமார் (17). ஈரோடு மாவட்டத்தில் உள்ள நல்லாம்பட்டி கிராமத்தில் தந்தை குழந்தைவேல் மற்றும் தாயார் சகுந்தலா ஆகியோருடன் வசித்து வந்தார். 

இந்நிலையில், நிர்மல் குமார் கடந்த 10ம் தேதியன்று வீட்டிலிருந்து கல்லூரிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது மோட்டார் சைக்கிள் அவ்வழியாக சென்றுகொன்றிருந்த ஒரு பேருந்தின் மீது வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தலையில் பலத்த காயமடைந்த நிர்மல் குமார் சிகிச்சைக்காக ஈரோடு அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக கோவையில் செயல்பட்டு வரும் கே.எம்.சி.எச். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 2ம் தேதி அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து, நிர்மலின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர்கள் முன்வந்ததை அடுத்து கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகம் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், இருதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கும் மற்றும் கண்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்த உடல் உறுப்புகள் 6 நபர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் என கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...