சிறப்பு விற்பனையில் கோ- ஆப்டெக்ஸ்

தமிழகம் முழுவதும் நெசவாளர்களின் கைவண்ணத்தை எவ்வித லாப நோக்கமும் இன்றி விற்பனை செய்ய துவங்கப்பட்டதே கோ- ஆப்டெக்ஸ் துணி அங்காடியாகும். கோவை வஉசி அருகே செயல்பட்டுவரும் கோ- ஆப்டெக்ஸ் அங்காடி தனது சிறப்பு விற்பனையை செப்டம்பர் 15 முதல் தொடக்கி 2017 ஜனவரி 31ம் தேதிவரை நடத்தவுள்ளது. இந்த விற்பனையை கோவை மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்தார்.



இந்த கோ- ஆப்டெக்ஸ்-யில் பெண்களுக்கான இயற்கை நூலால் தயாரிக்கப்பட்ட சேலை, காஞ்சிபுரம் பட்டு, பரமக்குடி காட்டன், நெகமம், கோவையின் சிறப்பான கோரப்பட்டு, உரையூர் பட்டு, ஜெயகார்திகா பட்டு உள்ளிட்ட ஏராளமான சேலைகள் இடம்பெற்றுள்ளன. ஆண்களுக்கென லெனின் நூலால் நெய்யப்பட்ட சட்டைகளும், வீட்டு உபயோகப்பொருட்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதில் அரசு ஊழியர்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கு சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.





மேலும், இந்த சேலைகளை நெசவு செய்யும் போது நெசவாளர் மேற்கொண்ட வழிமுறைகள், அதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் உள்ளிட்டவை குறித்தும் சேலையின் விலைப்பட்டியலுக்கான அட்டையிலேயே குறிப்பிட்டுள்ளனர்.



இதுகுறித்து கூறிய பாரதியார் பல்கலைக்கழக ஐஏஎஸ் பிரிவின் இயக்குனர், தான் ஆண்டுதோறும் இங்கு பொருட்களை வாங்கிச்செல்வதாகவும், வேறு எங்கும் கிடைக்காதே நல்ல முறையிலான துணி ரகங்கள் இங்கு கிடைக்கின்றன. விலையில் சிறிதளவு கூட மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் பொருட்களின் பணம் முழுவதும் நெசவாளர்களுக்கே சேரும் என தெரிவித்தார். 



கோ- ஆப்டெக்சின் பிராந்திய மேலாளர் கூறுகையில், கோ- ஆப்டெக்சின் முக்கிய குறிக்கோலே நெசவாளர்களின் பொருட்களை விற்பனை செய்வது ஆகும். இங்கு நெசவாளர்கள், இயற்கை பொருட்கள் தவிர்த்து வேறு எதுவும் விற்பனை செய்யப்படுவது இல்லை. கோ- ஆப்டெக்சின் மூலம் நிர்ணயிக்கப்பட்டு பெறப்படும் பணம் அனைத்தும் நெசவாளர்களிடமே கொடுக்கப்படுகிறது என தெரிவித்தார்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...